அமெரிக்காவில் கைதான மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா.. இந்தியாவுக்கு நாடுகடத்த ஏற்பாடு
சிகாகோ: 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ல், மும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தினர்.

இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 240க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தானியரான, தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்று, முகமது நபியின் கார்ட்டூனை வெளியிட்டதற்காக அதன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 10 வருடங்களுக்கு மேலாக லாஸ்ஏஞ்சல்ஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவர், மோசமான உடல்நிலை மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், இவரிடம் இந்தியா விசாரணை நடத்த தேவை உள்ளதால், விடுதலை செய்யப்பட்ட அடுத்த இரண்டாவது நாளில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் மும்பை தாக்குதல் குற்றவாளியான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோரும் உயர் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறப்படுகிறது. விரைவில், தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications