முதலில் பிரா... அடுத்து பேண்டீஸ்.. அமெரிக்கக் கடையை குறி வைத்து சூறையாடிய திருடிகள்!
வில்கிஸ் பேரி, பென்சில்வேனியா, அமெரி்க்கா: அமெரி்க்காவில் ஒரு குறிப்பிட்ட கடையை 2 பெண்கள் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்று அடுத்தடுத்து புகுந்து சூறையாடியுள்ளனர்.
இதில் ஹைலைட் என்னவென்றால், இந்தத் திருடிகள் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறி வைத்துத் திருடிச் சென்றுள்ளதுதான்.
முதலில் இந்தக் கும்பல் 150 பிராக்களைத் திருடிச் சென்றது. அடுத்து 140 பேண்டீஸ்களைத் திருடிச் சென்றுள்ளது. யார் இந்தத் திருடர்கள், ஏன் இப்படி வித்தியாசமாக திருடினார்கள் என்பது தெரியாமல் போலீஸார் குழம்பிப் போயுள்ளனர்.
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வில்கிஸ் பேரி என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.

பிப்ரவரி மாதத்திலிருந்து
இந்தக் கடையில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே இந்தத் திருடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். அவர்கள் யாருமே இதுவரை போலீஸ் பிடியில் சிக்கவில்லை.

முதலில் பிரா திருட்டு
முதலில் இவரக்ள் கடந்த மார்ச் மாதத்தில் இந்தக் கடைக்குள் புகுந்து 150 பிராக்களைத் திருடிச் சென்றனர். அதன் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 9 லட்சமாகும்.

பேண்டீஸ் திருட்டு
இந்த நிலையில் சமீபத்தில் இக்கடையில் புகுந்த அதே திருடிகள் பேண்டீஸ்களைத் திருடியுள்ளனர். ரூ. 1.3 லட்சம் மதிப்பிலான பேண்டீஸ்களை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

2 பெண்கள்தான்
பிராக்களை அவர்கள் திருடியபோது கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளனர். ஒரு பெரிய பையில் அவர்கள் பிராக்களை திணித்து எடுத்துச் சென்றது பதிவாகியுள்ளது. ஆனால் முகம் தெரியவில்லை.

மறுபடியும் வந்தா பிடிச்சிரனும்
இந்த நிலையில் மீண்டும் இந்தப் பெண்கள் திருட வந்தால் கண்டிப்பாக பிடித்து விடுவோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டதாக கடைக்காரர் கூறி வருகிறார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications