பால்ட்டிமோரில் பல்கலைக்கழகம் அருகே பெண் உள்பட 3 பேர் சுட்டுக் கொலை: போலீஸ் கமிஷனர் டிஸ்மிஸ்
பால்ட்டிமோர்: அமெரிக்காவில் உள்ள பால்ட்டிமோர் நகரில் இருக்கும் மேரிலேண்ட் பல்கலைக்கழகம் அருகே ஒரு பெண் உள்பட 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் இருக்கும் பால்ட்டிமோர் நகரில் உள்ளது மேரிலேண்ட் பல்கலைக்கழகம். செவ்வாய்க்கிழமை இரவு பல்கலைக்கழகம் அருகே இரண்டு வாகனங்களில் வந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குண்டு பாய்ந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒரு பெண் மற்றும் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் அந்த பெண் மற்றும் ஒரு ஆண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.
இந்த 3 பேரையும் சேர்த்து இந்த ஆண்டு மட்டும் பால்ட்டிமோரில் 154 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பால்ட்டிமோரில் கொலை சம்பவங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
பால்ட்டிமோரில் கொலைகள் அதிகரித்துள்ளதையடுத்து போலீஸ் கமிஷனர் ஆண்டனி பேட்ஸை மேயர் ஸ்டெபனீ ராலிங்ஸ்-பிளேக் புதன்கிழமை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications