9 குழந்தைகளுடன் ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்ற 3 யு.கே. சகோதரிகள்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் தங்களின் 9 குழந்தைகளுடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் சகோதரிகள் கதீஜா தாவூத்(34), சுக்ரா தாவூத்(34) மற்றும் ஜொஹ்ரா தாவூத்(33). வெஸ்ட் யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் வசிந்து வந்த சகோதரிகள் தங்களின் 3 முதல் 15 வயது வரையிலான 9 குழந்தைகளுடன் கடந்த மே மாதம் 28ம் தேதி புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியாவுக்கு சென்றனர்.

அவர்கள் கடந்த 11ம் தேதி இங்கிலாந்திற்கு திரும்பி வந்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் வரவில்லை. சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் மதினாவில் இருந்து விமானம் மூலம் இஸ்தான்புல் சென்றுள்ளனர். அந்த பெண்களின் சகோதரர் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
அதனால் சகோதரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுள்ளனர் என்று அவர்களின் கணவன்கள் சந்தேகிக்கின்றனர். குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளது தான் அவர்களின் முக்கிய கவலையாக உள்ளது.
இது குறித்து குழந்தைகளின் தந்தைகளின் வழக்கறிஞர் பலால் கான் கூறுகையில்,
சகோதரிகள் சிரியாவுக்கு 9 குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளது அவர்களின் தந்தைகளுக்கு கவலையாக உள்ளது. அவர்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தந்தைமார்கள் தவிக்கிறார்கள். தங்களின் குழந்தைகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக் கூடாது என்று நினைக்கின்றனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications