வங்கதேச மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 10 குழந்தைகள், 22 பேர் மர்ம மரணம்
டாக்கா: வங்கதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 24 மணிநேரத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உள்பட 32 பேர் மர்ம மரணம் அடைந்துள்ளனர்.
வங்கதேசத்தின் வடகிழக்கு பகுகுதியான சில்லட் நகரில் உள்ளது உஸ்மானி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி 24 மணிநேரத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உள்பட 32 பேர் மர்ம மரணம் அடைந்தனர். அந்த 10 குழந்தைகளும் 12 மணிநேரத்தில் அடுத்தடுத்து இறந்துள்ளன. இறந்த குழந்தைகளில் 5 பிறந்த அன்றே இறந்துள்ளன.

இது குறித்து மாநில சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜாஹித் மாலிக் கூறுகையில்,
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கூடுதல் செயலாளர் தலைமையிலான மூவர் குழுவை அரசு அமைத்துள்ளது. ஏதாவது தவறு நடந்திருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மர்ம மரணம் குறித்து உஸ்மானி மருத்துவக் கல்லாரி மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அன்று பிறந்த குழந்தைகள் பிரசவத்தின்போது ஏற்பட்ட பிரச்சனைகள், மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியாவால் பலியானதாக மருத்துவமனை உயர் அதிகாரி அப்துஸ் ஸலாம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 24 மணிநேரத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் 32 பேர் பலியானதாக அவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications