சாகும்வரை உண்ணாவிரதம் இருங்க! ஏசு கிறிஸ்து தோன்றுவார்! பாதிரியாரின் மூடநம்பிக்கையை நம்பிய 4 பேர் பலி
நைரோபி: காட்டில் உண்ணாவிரதம் இருந்தால் இயேசு கிறிஸ்து காட்சியளிப்பார் என பாதிரியார் ஒருவர் சொல்லை கேட்டு காட்டு பகுதிக்கு சென்ற 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்யா நாட்டில் கிலிஃபி மாகாணத்தில் உள்ளது ஷக்கஹோலா கிராமம். இந்த கிராமத்தில் ஒரு சர்ச் உள்ளது. இதன் பாதிரியாராக பால் மக்கென்ஸி உள்ளார். இவர் தனது தேவாலயத்திற்கு வரும் நபர்களில் யாருக்கு பக்தி அதிகம் இருக்கிறது, யார் கடவுளை பார்க்க துடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வாராம்.

அதன்படி அவர்களுக்கு சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படுமாம். அந்த கூட்டத்தொடரில் யேசு கிறிஸ்துவை நேரில் சந்திக்க என்ன வழி, சொர்க்கத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என சொல்வது வழக்கமாம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தால் ஏசு கிறிஸ்துவை பார்க்கலாம் என இவர் சொல்லியுள்ளாராம்.
இதுகுறித்து ஒரு கூட்டம் நடந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸார் அந்த தேவாலயத்தில் சோதனை நடத்தினர். அப்போது பாதிரியார் சொர்க்கத்துக்கு செல்வது குறித்தும் யேசு கிறிஸ்துவை சந்திப்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தாராம். உடனே அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அதாவது 15 பேர் கென்யாவில் உள்ள அடர்ந்த காட்டுக்கு சென்று அங்கு உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 15 பேரும் தண்ணீர் கூட குடிக்காமல் உணவு உண்ணாமல் இருந்தது தெரியவந்தது.
அவர்களை போலீஸார் அழைத்த போது அவர்கள் வர மறுத்தனராம். அவர்கள் நான் யேசு கிறிஸ்துவை பார்க்க வேண்டும். அதற்காக நாங்கள் பட்டினி கிடந்து இறந்தால் மட்டுமே அது நடக்கும். எங்களை விட்டு விடுங்கள், நீங்கள் இந்த இடத்தை விட்டு போங்கள் என கூறினராம். இதையடுத்து போலீஸார் அவர்களை வலுகட்டாயமாக அழைத்து சென்றனர்.
இந்த 15 பேரில் 3 பெண்களும் ஒரு ஆணும் இறந்துவிட்டனராம். மற்ற 11 பேரை மீட்ட போலீஸார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த காட்டில் சில சடலங்கள் எரிந்து கிடந்தன. எனவே அதுகுறித்து போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தற்போது அந்த பாதிரியார் தலைமறைவாக உள்ளாராம். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
கடந்த மாதம் இதே பாதிரியார் இரு குழந்தைகளை உயிரோடு புதைத்தால் அவர்கள் இருவரும் அனைவராலும் போற்றப்படும் ஹீரோக்களாக வருவார்கள் என அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் கூறினாராம். இதை நம்பிய அந்த பெற்றோர் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். இந்த வழக்கில் அந்த பாதிரியார் ஜாமீனில் வெளியே உள்ளாராம். கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி கென்யாவில் 85 சதவீதம் பேர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக பின்பற்றுகிறார்கள். இவர்களின் தீவிர பற்றை சிலர் பயன்படுத்தி இது போன்று மூடநம்பிக்கையை அவர்களுக்குள் புகுத்தி அவர்களையே இழக்கும் அளவுக்கு மூளை சலவை செய்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications