ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும்.. வெடித்து சிரிக்கும் மகள்.. அதன் பின்னால் எத்தனை வேதனை.. வலி!
குண்டு வெடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறாள் 4 வயது பெண் குழந்தை!
Recommended Video
சென்னை: இந்த வீடியோவைப் பார்க்கும் மனிதகுலம் வெட்கித் தலை குனிய வேண்டும்.. தன்னை அறுவெறுப்பாக உணர வேண்டும். எவ்வளவு அழகான உலகத்தை எப்படி அலங்கோலமாக்கி வைத்திருக்கிறோம்.. இந்த மனிதர்களை எப்படித் தண்டித்தால் தகும்.. அத்தனைகோபம் வருகிறது இந்த வீடியோவைப் பார்க்கும்போது.
சிரியா நிலவரம் எல்லோருக்கும் தெரிந்ததே. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நிம்மதியாக சாப்பிட முடியாமல், நிம்மதியாக தூங்க முடியாமல்.. ஏன் நிம்மதியாக சிரிக்கக் கூட முடியாத அளவுக்கு கோர தாண்டவமாடி வருகிறார்கள் ஆயுத வியாபாரிகள்.
அவர்களிடம் சிக்கி எத்தனை எத்தனை விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன தெரியுமா.. பல லட்சம் பேர் அகதிகளாகி விட்டனர். இந்த சிரியாவில் நடக்கும் ஒரு காட்சிதான் இந்த வீடியோவில் உள்ளது.

தந்தை - மகள்
இத்லிப் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு அப்பாவும், அவருடைய அருமை மகளும் அந்த வீடியோவில் உள்ளனர். அப்பா பெயர் அப்துல்லா. பாப்பா பெயர் செல்வா. சின்னப் பாப்பா. பார்க்க அத்தனை அழகு.. அந்த பாப்பாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா மகளுக்கு ஏதோ சொல்லி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

பெரும் வலி
அப்போது பேச்சின் ஊடாக, குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதாவது குண்டு வீச்சு நடக்கிறது. உடனே மகள் வெடித்துச் சிரிக்கிறாள். அவளுக்கு அவ்வளவு சிரிப்பாக வருகிறது. இங்குதான் பெரும் வலி ஒன்று மறைந்துள்ளது. அதாவது வெடிகுண்டுச் சத்தத்தால் தனது மகள் பயந்து போய் விடக் கூடாது என்பதற்காக வெடிகுண்டுச் சத்தம் கேட்டால் சிரிக்க வேண்டும் என்று பழக்கி வைத்துள்ளார் அந்த அப்பா.

குண்டுவீச்சின் கோரம்
இதனால்தான் வெடிகுண்டுச் சத்தம் கேட்டதும் அந்தக் குழந்தை சற்றும் பயப்படாமல் ஜாலியாக சிரிக்கிறது. அந்த மழலைக்கு வெடிகுண்டு வீச்சின் கோரம் கொஞ்சம் கூட தெரியக் கூடாது என்பதற்காக அப்துல்லா இப்படி பழக்கி வைத்துள்ளார். மகளுக்கு சிறு வேதனை கூட தெரியக் கூடாது, வலி கூட வரக் கூடாது என்று நினைக்கும் சராசரி அப்பாதான் என்று நாம் கடந்து போய் விட முடியவில்லை.

அப்துல்லா
பிள்ளைகளை பாதுகாப்பாக கூட வளர்க்க முடியாத ஒரு மோசமான சூழலில் வாழும் அப்துல்லா போன்ற எண்ணற்ற அப்பாக்கள் சிரியாவில் வேதனையில் செத்துக் கொண்டுள்ளனர். மனித வாழ்க்கையின் ஆகப் பெரிய சந்தோஷமே நிம்மதியான, அமைதியான வாழ்க்கைதான். அதற்குக் கூட உத்தரவாதம் இல்லாவிட்டால் அது என்ன நாடு அது என்ன அரசு.. ! இப்படிப்பட்ட சூழலையா நாம் பிஞ்சுக் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வது.. மனிதர்களை விட மோசமான விலங்குகள் வேறு ஏதேனும் இருக்க முடியுமா!
|
வேதனை
இந்த வீடியோவைப் பார்க்கவே பெரும் வேதனையாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இதில் வந்து தங்களது கோபம், வேதனை, ஆதங்கத்தைக் காட்டி பதில் போட்டுக் கொண்டிருக்கின்றனர். என்ன ஒரு சோகமான உலகம் பாருங்கள்.!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications