25 வயசு மனைவியை.. குத்தி கொன்று.. தோலை மட்டும் தனியாக உரித்தெடுத்த கணவன்.. மெக்சிகோ பயங்கரம்!
மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைதானார்
மெக்சிகோ: ஆத்திரம் அடங்காமல் கிச்சனுக்கு ஓடிப்போய், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றதுடன், அவரது தோலையும் தனியாக உரித்தெடுத்துள்ளார் கொடூர, கொடுமைக்கார கணவர்!
மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ.. இவருக்கு வயது 46 ஆகிறது.. இவரது மனைவிக்கு வயது 25 ஆகிறது.. வயது பொருத்தம் இல்லாத காரணத்தினால் இருவருக்குள்ளும் நிறைய தகராறு வந்துள்ளது.

அப்படி ஒரு சண்டை சம்பவத்தன்றும் நடந்தது.. அந்த நேரம் பார்த்து கணவன் செம போதையில் இருந்துள்ளார்.. தம்பதியிடையே வாக்குவாதம் முற்றியது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமும் & போதையும் தலைக்கேறிய கணவன், நேராக கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக குத்திவிட்டார்... உடம்பில் பல இடங்களில் கத்திகுத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மனைவி இறந்துவிட்டார்... அப்போதும் ஆத்திரமும், போதையும், வெறியும் அடங்காத கணவன், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய தலை முதல் கால் வரை தோலை உரித்து எடுத்துள்ளார்..
பிறகு உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து கொண்டு போய், ஒரு ஏரியில் வீசினார்... பிறகு வீட்டுக்கு வந்து கொலை செய்ததற்கான அடையாளங்களை அழித்துள்ளார். அதற்கு பிறகு முதல்மனைவிக்கு போன் செய்து தான் எப்படி எல்லாம் கொலை செய்தேன் என்பதை ஒன்றுவிடாமல் விளக்கி இருக்கிறார்.
இதை போனில் கேட்டதற்கே முன்னாள் மனைவி அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்..இதற்கு பிறகுதான் போலீசார்விரைந்து சென்றனர்.. அப்போது மிச்சம் மீதி இருந்த உடல்பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். கணவனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மெக்சிகோ நகரமே வெலவெலத்து காணப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், தோல் உரிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் சடலம் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.. அதை அந்நாட்டு ஊடகங்களும் பயன்படுத்தியிருந்தன.. இதற்கு மெக்சிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.. இந்த போட்டோவை பார்த்து மக்களும் கொதிப்படைந்து உள்ளனர்...
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications