ஆப்கானில் மீண்டும் நிலநடுக்கம்... பாக், வட இந்தியா நகரங்கள் குலுங்கின
காபூல்/ இஸ்லாமாபாத்/டெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு அண்மைக்காலமாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்றும் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 5.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதன் எதிரொலியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்குவா, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், டெல்லி, நொய்டா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 300 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications