ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஒரு மணிநேரத்தில் 5 முறை நிலஅதிர்வு.. சுனாமி வார்னிங் - மக்கள் ஓட்டம்
மாஸ்கோ: பசிபிக் பெருங்கடல் அருகே உள்ள ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் இன்று திடீரென்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் வீடுகள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வெளியே வந்த நிலையில் ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பசிபிக் பெருங்கடலையொட்டி நகரமாக பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி உள்ளது. இந்த நகரம் பசிபிக் பெருங்கடலில் அவாச்சா விரிகுடாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று அந்த நகரில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.6 முதல் 7.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாக பதிவாகின. இதனால் வீடுகள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
நிலநடுக்கத்தால் பயந்துபோன மக்கள் அலறியடித்து கொண்டு தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். அப்போதும் நிலநடுக்கம் நிற்கவில்லை. விட்டு விட்டு நிலஅதிர்வு ஏற்பட்டது. ஒரு மணிநேரத்தில் தொடர்ந்து 5 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் செல்லவில்லை.
அச்சத்துடனே வெளியே நின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது வீட்டில் பொருட்கள் கீழே விழுந்தது மற்றும் வீட்டில் இருந்து மக்கள் வெளியே ஓடிவந்தது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
ஜெர்மன் ஜியோ சயின்ஸ் ஆய்வு மையம் சார்பில் நிலநடுக்கத்தின் அளவு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் ஐரோப்பிய ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்,மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) ஆகியவை நிலநடுக்கங்களை பதிவு செய்தனர்
அதன்படி ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரின் கிழக்கு பகுதியில் 147 கிலோமீட்டர் தூரத்தில் முதலில் 6.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அந்த நகருக்கு கிழக்கே 151 கிலோமீட்டரில் 6.7 ரிக்டரிலும், பிறகு பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகருக்கு கிழக்கே 144 கிலோமீட்டர் தொலைவில் 7.4 ரிக்டரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.பிறகு பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகருக்கு கிழக்கே 130 கிலோமீட்டரில் 6.7 ரிக்டரிலும், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகருக்கு 142 கிலோமீட்டர் கிழக்கே 7 கிலோமீட்டரிலும் நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தது.
இதில் ரிக்டரில் 7.4 என்ற அளவில் பதிவான 3வது நிலநடுக்கம் தான் சுனாமி எச்சரிக்கைக்கு காரணமாகும். இதையடுத்து தான் நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதியை சுற்றி 300 கிலோமீட்டர் தொலைவுக்கு பசிபிக் பெருங்கடலில் சுனாமி வார்னிங் விடுக்கப்பட்டது. அதன்படி ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யரும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின்படி தொடர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதுபற்றி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications