பாகிஸ்தானில் மேலும் 5 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை... ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு
இஸ்லாமாபாத் : பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு மனி உயிர்களை பலிகொண்ட தீவிரவாதிகளில் மேலும் 5 பேருக்கு பாகிஸ்தான் ராணுவம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒரு தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவார் ராணுவப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு காரணமான 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டடிருந்தது.

இந்நிலையில் லாகூரில் வழக்கறிஞரை கொன்றது, குவெட்டாவில் தாக்குதல் நடத்தியது, காராச்சியின் குதாப் நகரில் காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பண்ணு சிறையை தகர்த்த வழக்கு, கைபர் பகுதியில் பகுதியில் பெண்கள் பள்ளி தாக்குதல் நடத்தியது ஆகியவை குறித்து ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்த ராணுவ தலைமை ஜெனரல் ரஹீல் ஷரீஃப் தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகள் மீது குற்றம் நீரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 5 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையும், ஒரு தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனையும் வித்து ரஹீல் ஷரீஃப் உத்தரவிட்டார். இதனை ராணுவ செய்தித் தொடர்பாளர் அசிம் பஜ்வா உறுதி செய்துள்ளார்.
பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவப் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தாலிபான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 148 குழந்தைகள் உள்பட 151 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலையடுத்து, மரண தண்டனையை தடையை நீக்கி பாகிஸ்தான் நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியது.
இதையடுத்து, அன்று முதல் இதுவரை 200க்கும் அதிகமானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications