யு.எஸ் சாலை விபத்தில் சிடிஎஸ் ஊழியர், மனைவி, 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
ஒக்லஹாமா: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் அடக்கம்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் வசித்து வந்தவர் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஜா(32). அவரது மனைவி அன்னு ஜா(31). அவர்களுக்கு 3 மற்றும் 1 வயதில் இரண்டு குழந்தைகள்.
கடந்த ஓராண்டாக பாஸ்கர் சிடிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8ம் தேதி அவர் தனது குடும்பத்தார் மற்றும் அக்னி பால் சிங்(34), மற்றும் ஒரு பெண்ணுடன் மினிவேனில் சென்றுள்ளார்.

வேனை பாஸ்கர் ஓட்டியுள்ளார். மழை பெய்து கொண்டிருந்தபோது பாஸ்கர் வேனை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். வேன் சௌடோ அருகே உள்ள மேயஸ் கவுன்ட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செல்கையில் கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மினிவேனில் இருந்த 6 பேரும் பலியாகினர். அனைவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் யார் என்று தெரியவில்லை. பாஸ்கர் குடும்பம் பலியான செய்தியை சிடிஎஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் உடல்கள் இன்னும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவரது சகோதரர் பிரேம் ஷங்கர் ஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications