ரிக்டரில் 7.7.. பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. இடிந்த விழுந்த கட்டடங்கள்..பீதியில் உறைந்த மக்கள்
பாகிஸ்தானில் பல இடங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுவர்களில் விரிசல்கள் பெரிய அளவில் விழுந்தன.
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு திடீரென்று 6.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசியாவில் உள்ள இந்தியா உள்பட பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
அதன்பிறகு தொடர்ந்து பல இடங்களில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சக்தி குறைந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவிலும் அதிர்ஷ்டவசமாக ஆபத்துகள் ஏற்படவில்லை.

ஆப்கானில் துவங்கிய நிலநடுக்கம்
இந்நிலையில் தான் இன்று ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைபகுதியை மையமாக வைத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதன் தொடர்ச்சியாக துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மேலும் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் இன்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி ,உத்தர பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் மற்றும் ஹரியானா உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், இந்தியாவை விட விட பாகிஸ்தானில் தான் அதிகமாக பதிவாகி உள்ளது.

இடிந்த கட்டடங்கள்
இதேபோல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பெஷாவர், லாகூர் நகரங்களும் நிலநடுக்கத்தால் அதிர்ந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இந்நிலையில் தான் நேற்று இரவு பாகிஸ்தானில் சுமார் 30 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பல இடங்களில் உள்ள கட்டங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பல கட்டங்களின் சுவர்களில் நீளமான வெடிப்புகள் ஏற்பட்டதோடு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிர் சேதம் இல்லை என தகவல்
அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. நேற்றைய நிலவரப்படி இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம் 7.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் தூக்கம் தொலைத்து பீதியில் உறைந்தனர்.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications