இங்கிலாந்தில் மதுபான விடுதி மீது போலீஸ் ஹெலிகாப்டர் மோதி விபத்து: 8 பேர் பலி
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் மதுபான விடுதியின் மொட்டை மாடியில் போலீஸ் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி எட்டுபேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு, இங்கிலாந்தின் கிலாஸ்கோ நகரில் உள்ள பிரபல மதுபான விடுதியின் மொட்டை மாடியில் ஏராளமானோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பறந்து வந்த போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விடுதியின் மீது மோதியது.
ஹெலிகாப்டர் மோதியதால், மதுபான விடுதி இடிந்து விழுந்தது. இதில், விடுதியில் இருந்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்புப் பணியில் துரித கதியில் ஈடுபட்டனர்.

விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 போலீசாரும், விடுதியில் இருந்த 5 பேரும் பலி பரிதாபமாகப் பலியாகினர். பலியான ஐந்து பேரில் ஒருவரது பெயர் மட்டும் அடையாளம் காணப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலரின் நிலைமை மேலும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications