ஈராக்கில் 200 பேருடன் நதியில் கவிழ்ந்த சிறிய படகு.. 94 பேர் பலி.. கலங்க வைக்கும் வீடியோ காட்சி!

ஈராக்கில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மொத்தம் 94 பேர் நீரில் மூழ்கி பலியாகி இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    200 பேருடன் நதியில் கவிழ்ந்த சிறிய படகு.. 94 பேர் பலி-வீடியோ

    மொசூல்: ஈராக்கில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மொத்தம் 94 பேர் நீரில் மூழ்கி பலியாகி இருக்கிறார்கள். மொத்தம் 200 பேர் வரை நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

    நேற்று உலகம் முழுக்க குர்தீஷ் உள்ளிட்ட பல்வேறு இன மக்களால் வசந்தத்தை வரவேற்கும் நவ்ரூஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை ஈரானில் புதிய வருடமாகவும் கொண்டாடப்படுகிறது.

    இதை கொண்டாடுவதற்காக ஈரானில் மொசூலில் இருந்து டைகிரிஸ் நதியில் படகில் சென்ற மக்கள்தான் விபத்தில் சிக்கி இருக்கிறார்கள்.சராசரியாக 80 பேர் வரை செல்லும் படகில் கூட்டம் காரணமாக 200 பேர் சென்று இருக்கிறார்கள்.

    என்ன கோளாறு

    என்ன கோளாறு

    இந்த நிலையில் மொசூலில் அந்த படகு செல்லும் போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் படகு அப்படியே தலைகீழாக கவிழ்ந்தது. படகு கவிழ்ந்து மக்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். படகு தலைகீழாக அப்படியே கவிழ்ந்ததில், நிறைய பேர் வெளியேற முடியாமல் அடியில் சிக்கினார்கள்.

    பலி

    பலி

    இந்த விபத்தில் மொத்தம் 94 பேர் பலியானார்கள். 200 பேரில் மீதம் இருக்கும் 54 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மீதம் இருக்கும் நபர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அங்கு தீவிரமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    சிறுவர்கள்

    நீரில் மூழ்கியவர்கள் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அதிகமாக பெண்களும், குழந்தைகளும் பலியாகி இருப்பதாக தெரிகிறது. நீச்சல் அடிக்க தெரியாத சிறுவர்கள் பலர் இதில் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

    என்ன வீடியோ

    என்ன வீடியோ

    இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. படகு அப்படியே தலைகீழாக கவிழ்வது இதில் பதிவாகி உள்ளது. இது பார்க்கவே அச்சமூட்டும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+