காஸா போர்க் களத்திற்கு சைக்கிளில் செல்லும் ஜெர்மானியர்! 7 மாதம் முன் உயிர் தப்பி வந்தது எப்படி?
ஜெர்மன்: கடந்த 7 மாதங்களுக்கு முன் காஸா போரில் சிக்கிக் கொண்டு உயிர் தப்பி வந்த அபேத் என்ற இளைஞர் மீண்டும் ஜெர்மனியிலிருந்து காஸாவை நோக்கி சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவர் தனது தாயுடன் போரில் சிக்கிக் கொண்டு தவித்த அனுபவங்களை இப்போது வீடியோ மூலம் விளக்கிக் கூறியுள்ளார்.
பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஸாவில் இவர்களின் டாங்கி படைகள் முன்னேறிச் செல்ல தொடங்கியுள்ளன என்று ராய்ட்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த மார்ச் மாதம் கத்தார் மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது.

ஆகவே, காஸா மக்கள் இனிமேல் போர் தாக்குதல்கள் தொடராது என்று மகிழ்ச்சி இருந்தனர். தெருக்களில் இறங்கி இந்தப் போர் நிறுத்த ஒப்பந்த முடிவைக் கொண்டாடினர். ஆனால், இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்க மறுத்தது. இதுவரை காஸாவில் அமைதி திரும்பவில்லை.
கடந்த 8 மாதங்கள் முன்னதாக இஸ்ரேல் மிகக்கொடூரமான தாக்குதலை காஸா மீது நடத்தியது. அதனால் அங்குள்ள கட்டடங்கள் அனைத்து தரைமட்டமாகின. அந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 1000 பேர் பலியாகினர். ஹமாஸ் படைகள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியான செய்தி உலகையே உலுக்கியது.
இந்த வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் விமானப் படைத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்திருந்தது. இஸ்ரேஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் இவர்தான் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தது இஸ்ரேல்.

இந்தப் போருக்கு அஞ்சி, காஸாவை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அதை தடுப்பதற்காக ஹமாஸ் படையினர் எல்லையில் உள்ள சாலைகளை மூடி வருவதாகவும் அப்போதே இஸ்ரேல் குற்றஞ்சாட்டி இருந்தது. ஒரு காலத்தில் அழகிய நகரமாக இருந்த காஸா இன்று சிதிலமடைந்து சின்னா பின்னமாகக் காட்சியளித்து வருகிறது. எங்குப் பார்த்தாலும் புகை மூட்டம். கொழுந்து விட்டு எரியும் தீ. இப்போதைக்கு காஸாவின் அடையாளம் இதுதான்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அப்போது 1200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். கூடவே 250க்கும் மேற்பட்டவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். இதற்குப் பதிலடி தரும் வகையில் இஸ்ரேல், இதுவரை 37,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளது. இந்தக் கொடூர சம்பவம் காஸாவில் நடைபெறுவதற்கு முன்பு தனது உறவினர்களைப் பார்க்க அங்கே சென்றிருந்தார் அபேத் ஹாசன். இவர் ஜெர்மனியில் பிறந்த பாலஸ்தீனியர் ஆவார்.

எதிர்பாராதவிதமாகக் குண்டு மழைகளுக்கு நடுவே, போருக்கு மத்தியில் ஐந்து வாரங்கள் சிக்கிக் கொண்டுள்ளார் அபேத். அந்தப் பகுதியைவிட்டு வெளியேறச் செல்வதற்கு முன், அவர் பல மரணங்களையும் காயம் பட்டு கண்ணீரில் துடிதுடித்துக் கொண்டிருந்தவர்களையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுள்ளார். அது குறித்து ஒரு வீடியோ பதிவையும் அவர் வெளியிட்டிருந்தார். இப்போது அவர், ஜெர்மனியில் உள்ள தனது வீட்டிலிருந்து காஸாவை நோக்கி சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் மூலம் பாலஸ்தீனிய பகுதியான காஸாவில் ஒரு மருத்துவமனைக்காக சுமார் 300,000 யூரோக்களை திரட்டும் முயற்சியில் இவர் ஈடுபட்டுள்ளார். இது தனது நீண்ட நாள் கனவு என்றும் ஆகவே, தன்னைப் பொறுத்தவரை இந்த சைக்கிள் பயணம் மிகமிக முக்கியமானது என்கிறார் அபேத். இவரைப் பற்றிய ஒரு செய்தியை பிபிசி வெளியிட்டுள்ளது.

இதுவரை அபேத் 10 நாடுகளைக் கடந்து துருக்கியை அடைந்துள்ளார். தனது பழை நினைவுகள் பற்றி பேசியுள்ள அபேத், "தன்னால் போரை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஆகவேதான் இந்த முயற்சியை எடுத்துள்ளேன்" என்கிறார்.
"நான் காஸாவில் அம்மாவுடன் தங்கி இருந்தபோது எது நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தேனோ அது நடந்தது. என் வீட்டிலிருந்து 20 மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டில் குண்டு விழுந்ததில், அவ்வீடு தீ பற்றி எரிந்தது. நான் உடனே அந்தப் பக்கத்து வீட்டை நோக்கி ஓடினேன். இடிபாடுகளிலிருந்து ஒரு பெண்ணை மீட்டேன். அவருக்கு உயிர் இருந்தது. மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். அவரை மட்டுமே காப்பாற்றினோம். அவரது குழந்தை தாக்குதலில் உயிரிழந்தது" எனப் பழைய கண்ணீர் விட்டுக் கதறிய நினைவுகளை மீட்டு எடுத்துப் பேசுகிறார் அபேத்.
ஐந்து வார இந்த நரக வாழ்க்கையிலிருந்து எப்படியோ அம்மாவை அழைத்துக் கொண்டு ஜெர்மனுக்கு வந்து சேர்ந்தார் அபேத். இங்கு வந்த பிறகும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அந்த மக்களின் கண்ணீர் அவரை தூங்கவிடாமல் செய்தது. 'இந்த மக்கள் செய்தது என்ன? அவர்களின் சொந்த மண்ணில் வாழ விரும்பியது ஒரு குற்றமா?' என்கிறார் அபேத்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications