நைட்ஷிப்டில் வேலை அதிகமாக இருக்காம்.. 10 நோயாளிகளை விஷஊசி போட்டு கொன்ற நர்ஸ்.. தண்டனையை பாருங்க
பெர்லின்: ஜெர்மனி மருத்துவமனையில் நைட்ஷிப்டில் வேலை அதிகமாக இருப்பதாக கூறி நர்ஸ் ஒருவர் 10 பேரை கொன்று மேலும் 27 பேரை கொல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த நர்ஸ்க்கு தண்டனையை அறிவித்துள்ளது. ஜெர்மனியை உலுக்கிய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
ஜெர்மனின் மேற்கு பகுதியில் வூர்சிலன் என்ற இடம் உள்ளது. இங்குள்ள மருத்துவமனையில் ஆண் ஒருவர் நர்சாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2007 ம் ஆண்டில் நர்சிங் படிப்பு மற்றும் பயிற்சியை முடித்தார். அதன்பிறகு வெவ்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2020ம் ஆண்டில் வூர்சிலன் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். மருத்துவமனையில் பணி என்பது ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். அந்த ஆண் நர்ஸ்க்கு இரவு பணியும் வந்தது.
பொதுவாக இரவு பணியின்போது நள்ளிரவில் குறைந்த அளவில் மட்டுமே ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் அவருக்கு இரவு பணி என்பது பிடிக்காமல் இருந்துள்ளது. மேலும் சில நாட்களில் அதிகமான நோயாளிகள் இருக்கும்போது இரவு பணி கடினமானதாக மாறிவிடும். தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருந்துள்ளது.
இதனால் அவர் தனது பணி சுமையை குறைக் வேண்டும் என்பதற்காக சிகிச்சை பெற்று வரும் 10 பேரை கொன்றுள்ளார். 2023 டிசம்பர் மாதம் முதல் 2024 மே மாதம் வரை அவர் தனது இரவு பணியின்போது முதியவர்களுக்கு பெயின் கில்லர் மற்றும் மயக்க மருந்து தொடர்பான ஊசிகளை போட்டு கொன்றுள்ளார். மேலும் 27 பேரை கொல்ல முயன்றுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து அவரை போலீசார் கடந்த 2024 மே மாதம் கைது செய்தனர். இரவு பணியின் சுமையை குறைப்பதற்காக ஆண் நர்ஸ் ஒருவர் 10 பேரை ஊசிபோட்டு கொன்ற சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நர்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதுபற்றி ஆச்சின் நகரில் உள்ள நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛நர்ஸ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் 14 ஆண்டுகள் வரை சிறையில் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். இந்த காலக்கட்டத்தில் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. அதேவேளையில் 15வது ஆண்டில் அவர் சிறையில் இருந்து வெளியே வரலாம். அதுவும் அவரது நடத்தையை பொறுத்தே அமையும்'' என்று கூறியுள்ளார்.
ஜெர்மனில் இப்படியான சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு வடக்கு ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் நர்ஸாக பணியாற்றிய நீல்ஸ் ஹெகல் மொத்தம் 85 நோயாளிகளை கொன்றார். இவர் 1999 முதல் 2005 காலக்கட்டத்தில் இந்த கொலைகளை செய்தார். தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கான மருந்துகளை கொடுத்து கொடூரமாக கொன்றார். அந்த வழக்கில் நீல்ஸ் ஹெகல் கைது செய்யப்பட்டதோடு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications