தகர்ந்தது நம்பிக்கை.. கொரோனா வைரஸ் மருந்து ரெம்டெசிவிர் முதல் சோதனையிலேயே தோல்வி
பெய்ஜிங்: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் கிளினிக்கல் டெஸ்டில் வைத்து பரிசோதிக்கப்பட்ட remdesivir மருந்து முதல் பரிசோதனை முயற்சியில் தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு மருந்து கம்பெனிகள் இறங்கி உள்ளன.
அந்த வகையில் பல்வேறு ஆய்வு பரிசோதனைகள் காரணமாக கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக ரெமெடிவிர் மருந்தை சிகிச்சையளிக்க பயன்படுத்த முடியும் என்ற பரவலான நம்பிக்கை இருந்தது.

ரெம்டெசிவிர் மருந்து தோல்வி
ஆனால் சீனாவில் நடத்தப்பட்ட கிளினிக்கல் சோதனை குறித்து உலக சுகாதார அமைப்பு தற்செயலாக வெளியிட்ட வரைவு ஆவணங்களின்படி, மருந்து வெற்றிகரமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்து நோயாளிகளின் நிலையை மேம்படுத்தவில்லை என்றும் இரத்த ஓட்டத்தில் நோய்க்கிருமிகளின் இருப்பைக் குறைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறாக சித்தரிப்பு
ஆனால் இந்த மருந்தை தயாரித்து வரும் அமெரிக்க நிறுவனமான கிலியட் சயின்சஸ், இந்த ஆவணம் ஆய்வை தவறாக சித்தரித்துள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் மருத்துவ பரிசோதனை தரவுத்தளத்தில் தற்செயலாக remdesivir மருந்தினை பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.

அறிக்கை நீக்கம்
அந்த அறிக்கையில் remdesivir மருந்து தோல்வி அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த செய்திகள் வேகமாக பரவிய நிலையில் , தோல்வியுற்ற சோதனை பற்றி வரைவு அறிக்கை தவறுதலாக பதிவேற்றப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியதுடன் அதனை உடனே நீக்கிவிட்டது.

சோதனை எப்படி இருந்தது
இதற்கிடையே remdesivir மருந்தினை ஆராய்ச்சியாளர்கள் 237 நோயாளிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்திருக்கிறார்கள். மருந்து 158 பேருக்கு சரியாக வேலை செய்யவில்லை. 79 பேருக்கு முன்னேற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு, மருந்து உட்கொண்ட நோயாளிகளில் 13.9% பேர் இறந்துவிட்டனர். பக்க விளைவுகள் அதிகம் இருந்த காரணத்தால் இந்த சோதனை ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டது. "ரெம்டெசிவிர் மருத்துவ வைராலஜிக்கல் நன்மைகளுடன் தொடர்புபடுத்தப்படவில்லை" என்று உலக சுகாதார நிறுவனம் தற்செயலாக வெளியிட்ட வரைவு அறிக்கையில் சுருக்கமாக கூறப்பட்டிருந்தது இதனிடையே இந்த மருந்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய அமெரிக்க பங்குகள் 1% க்கும் அதிகமான அளவு சரிவை சந்தித்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications