பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக என்ஜீனியர்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் கத்தியால் குத்தப்பட்ட தமிழக இளைஞர் நண்பரின் வீடு வரை ரத்தக் காயங்களுடன் ஓடி உயிரை விட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் கொலைக்கா
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் என்ற 26 வயது இளைஞர் பாரீஸில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பரை காண மெட்ரோ ரயிலில் பாரீஸின் வாகிரார்டு ஸ்டேஷனில் இறங்கியுள்ளார்.

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெளியே சென்ற அவரை மர்மநபர்கள் கத்தியால் கழுத்து மற்றும் மார்பில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் ரத்தம் சொட்ட சொட்ட நண்பரின் வீட்டுக்கு ஓடியுள்ளார்.
நண்பரின் வீட்டு காலிங் பெல்லை அழுத்திய அவர் அங்கே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். கதவை திறந்த நண்பர், ரத்த வெள்ளத்தில் மணிமாறன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை முயற்சியில் மணிமாறன் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் அந்நாட்டு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பிரான்ஸில் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது வெளி நாடு வாழ் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications