Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் டேபிளுக்கு கீழே.. கொடூர கைதிக்கு பெண் நீதிபதி முத்தம்.. அம்பலமான சிசிடிவி காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

ரியோ டி ஜெனீரோ: அர்ஜென்டினாவில் காவல் துறை அதிகாரியை கொடூரமாக சுட்டுக் கொன்ற ஆபத்தான கைதி ஒருவருக்கு பெண் நீதிபதி பரிந்து பேசி அவருக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்யுமாறு வாக்களித்தது ஏன் என்பது தொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

அர்ஜென்டினாவை சேர்ந்தவர் லியாடிரோ ராபர்ட்ஸ். இவர் காவல் துறை அதிகாரியாக இருந்தவர். அதே நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டைன் புஸ்டோஸ். இவர் பிரபல ரவுடியாவார். இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் ஏராளமாக உள்ளனர்.

இந்த நிலையில் இவரை பிடிப்பதற்காக லியாடிரோ தீவிர முயற்சி எடுத்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு புஸ்டோஸை பிடிப்பதற்காக லியாடிரோ சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

துப்பாக்கிச் சண்டை

துப்பாக்கிச் சண்டை

போலீஸ் தரப்பிற்கும் புஸ்டோஸுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையும் ஏற்பட்டது. இதில் லியாடிரோவை புஸ்டோஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த போலீஸ் அதிகாரி அதே இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அர்ஜென்டினாவை உலுக்கியது. இதையடுத்து தீவிர விசாரணைக்கு பிறகு புஸ்டோஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் தண்டனை முடிவு

ஆயுள் தண்டனை முடிவு

இந்த நிலையில் புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து புஸ்டோஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி ஆயுள் தண்டனை குறித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இதையடுத்து அந்த குழுவில் உள்ள நீதிபதிகள் புஸ்டோஸுடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் லியாடிரோவை சுட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டார். சிறைச் சாலையை உடைத்ததற்காக தன்னை லியாடிரோ கைது செய்ய வந்ததாகவும் அப்போது அவரிடம் இருந்து தப்புவதற்காக சுட்டுக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

பெண் நீதிபதி

பெண் நீதிபதி

இதையேற்ற நீதிபதிகள் குழு புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை விதிப்பது சரியான முடிவு என வாக்களித்தனர். மேலும் புஸ்டோஸ் மிகவும் ஆபத்தான நபர் என்பதால் அவரை வெளியில் விட்டால் நிறைய குற்றங்களை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த நீதிபதிகள் குழுவில் இருந்த மரியல் சுவாரெஸ் எனும் பெண் நீதிபதி, புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கக் கூடாது என வாக்களித்தார்.

தண்டனையை குறைக்க வேண்டும்

தண்டனையை குறைக்க வேண்டும்

மேலும் அவரது தண்டனை காலத்தை மேலும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதில் மெஜாரிட்டியான நீதிபதிகள், புஸ்டோஸுக்கு ஆயுள் சிறை கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்ததால் அவருக்கு ஆயுள் சிறையே உறுதி செய்யப்பட்டது. இத்தனை கொடூர குற்றவாளிக்கு மரியல் பரிந்து பேசுவது ஏன் என நீதிபதிகளுக்குள் கேள்வி எழுந்தது.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிறைத் துறை அதிகாரி ஒருவர் சிசிடிவி காட்சிகள் இருந்த காட்சிகளை எல்லாம் தனித்தனியாக வேறு ஒரு ஹார்ட் டிஸ்கிற்கு மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது புஸ்டோஸ் அடைக்கப்பட்டிருந்த சிறையில் நடந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் புஸ்டோஸிடம் விசாரிக்க வந்த மரியல் அவருடன் முத்தம் கொடுத்த காட்சிகள் பதிவானதை அடுத்து அதிர்ந்து போன அவர் நீதிபதிகள் குழுவிடம் சிசிடிவி காட்சிகளை ஒப்படைத்தார்.

சிசிடிவி மூலம் அதிர்ச்சி

இதையடுத்து சுபுட் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது மரியல் கூறுகையில் நான் சிறைக் கைதியை முத்தமிடவில்லை. நாங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறோம் என தெரிந்தும் எப்படி செய்வோம்? மேலும் புஸ்டோஸ் இருந்த சிறையை சுற்றிலும் போலீஸ் நடமாட்டம் இருந்தது.

முடிவு

முடிவு

அவர் குறித்து நான் ஒரு புத்தகம் எழுத முடிவு செய்தேன். அது குறித்து அவரிடம் பேசுவதற்காக அருகில் சென்று நெருக்கமாக பேசினேன். மற்றபடி நான் எந்த தவறையும் செய்யவில்லை. எங்களுக்குள் எந்த உணர்வுபூர்வமான உறவுகள் இல்லை. எல்லாமே பணி நிமித்தமானதுதான் என மரியல் ஒரே போடாக போட்டார். மிகவும் அபாயகரமான கைதிக்கு பரிந்து பேசியது மட்டுமல்லாமல் அவர் ஏதோ சேவை செய்தவர் போல் அவர் குறித்த புத்தகத்தை எழுத போவதாக மரியல் சொன்னதை கேட்டு நீதிமன்றமே அதிர்ந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த கொலைக்கு 12 வருடங்கள் கழித்து விசாரணை ஏன் என தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+