கிளிநொச்சி: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய யாழ். மாணவர் விபத்தில் பலி!
கிளிநொச்சியில் தமிழக ஜல்லிக்கட்டு புரட்சிக்கான ஆதரவு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு திரும்பிய யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் சாலை விபத்தில் பலியானார்.
யாழ்ப்பாணம்: தமிழக ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக இலங்கையின் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் சுப்பிரமணியம் முரளிதரன் சாலை விபத்தி சிக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு உரிமையை மீட்கும் புரட்சியில் குதித்துள்ளனர். இந்தப் புரட்சி தமிழகத்தை மட்டுமல்ல உலகநாடுகளில் வாழும் தமிழர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஈழத் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவில் முன்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் ஊடக துறை மாணவர் சுப்பிரமணியன் முரளிதரனும் (வயது 24) கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தியபடி ஜல்லிக்கட்டுக்காக முழக்கம் எழுப்பினார். பின்னர் சுப்பிரமணியம் முரளிதரன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கிளிநொச்சியை அடுத்த புளியம்பொக்கனை என்ற இடத்தில் சுப்பிரமணியம் முரளிதரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி ஒன்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியம் முரளிதரன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications