தீண்டாமை + இன பாகுபாடு.. அதானி குழுமத்தை அதிரவைத்த ஆஸ்திரேலிய பழங்குடியினர்.. பரபரப்பு புகார்
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் அதானி குழும பணியாளர்கள் மீது இன பாகுபாடு காட்டியதாக பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதானி குழுமம் சார்பில் நம்நாட்டில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் முதலீடு பெற்ற புகார் பற்றி எரியும் நிலையில் பழங்குடியினர் கூறிய இனபாகுபாடு புகார் தற்போது பரபரப்பை கூட்டி உள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் அதானி. இவர் நம் நாட்டின் 2வது பெரிய பணக்காரராக உள்ளார். இவர் துறைமுகம், எரிசக்தி, நிலக்கரி உள்பட பல்வேறு துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபகாலமாக அதானி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதோடு அமெரிக்கா நீதிமன்றம் கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது நம்நாட்டில் சூரிய ஒளி (சோலார்) மின்சார ஒப்பந்தம் பெற அதானி நிறுவனம் ரூ.2,200 கோடியை பல்வேறு வகைகளில் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதனை மறைந்தது அமெரிக்காவில் இருந்து முதலீடுகளையும் அதானி பெற்றுள்ளதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு அதானியிடம் இருந்து பணம் பெற்றவர்களின் பட்டியலில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அதானி மீது இன்னொரு புகார் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது அதானி குழுமம் மீது இனவெறி சர்ச்சை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் சார்பில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. கார்மிசெல் நிலக்கரி சுரங்கத்தில் அதானி குழுமத்தை சேர்ந்த பரிவாஸ் மைனிங் மற்றும் ரிசோர்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சுரங்கத்தின் அருகே தான் இனபாகுபாடு புகார் எழுந்துள்ளது.
அதாவது இந்த நிலக்கரி சுரங்கத்தின் அருகே பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்களிடம் தான் அதானி குழும பணியாளர்கள் இன பாகுபாடு காண்பித்ததாக கூறப்படுகிறது. அதாவது அந்த நிலக்கரி சுரங்கத்தின் அருகே நீரூற்றுகள் உள்ளன. தீண்டாமை வகையில் இந்த நீரூற்றுகளை பயன்படுத்த விடாமல் அதானி குழுமத்தினர் பழங்குடியின மக்களை தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதானி குழுமத்தினர் எப்படி தடுத்து இன பாகுபாடு காட்டினர் என்பது பற்றி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பழங்குடியின மக்கள் சார்பில் குயின்ன்ஸ்லாந்தில் உள்ள நாகானா யார்பைன் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ காலசார கஸ்டடியன்ஸ் ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்த புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications