அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!
பெய்ஜிங்: தாக்குதலில் என்னதான் அமெரிக்கா பெரிய கையாக இருந்தாலும், பாதுகாப்பு விஷயத்தில் ராணுவம் கோட்டை விட்டிருக்கிறது. இதை சரியாக புரிந்துக்கொண்ட ஈரான் உள்ளே புகுந்து அடித்திருக்கிறது. ஈரான் போரில் என்ன நடக்கிறது? அமெரிக்கா சொதப்பிய இடம் என்ன? என்பது குறித்து சீனா விளக்கம் அளித்திருக்கிறது.
'டாக்டிகல் மிசைல் டெக்னாலஜி' என்கிற புகழ்பெற்ற சீன பாதுகாப்புத்துறை சார்ந்த இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. இதில்தான் அமெரிக்காவின் பலவீனம் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈரான் போரில் என்ன நடந்தது?
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் வைக்கப்பட்டிருந்த, அமெரிக்காவின் சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு ஆயுதமான 'பேட்ரியாட்' மற்றும் 'தாட்' ஆகியவற்றை ஈரான் அடித்து நொறுக்கியிருக்கிறது. மட்டுமல்லாது இந்த சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பையும் மீறி, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சக கட்டிடம் மற்றும் விமான நிலையத்தையும் ஈரான் தாக்கியிருக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் ஒரு விஷயத்தை உறுதி செய்திருக்கிறது. ஈரானால் எவ்வளவு பெரிய வான் பாதுகாப்பையும் தாக்கி அழிக்க முடியும் என்பதுதான் அது.
விளக்கம் கொடுத்த சீனா
இதை விளக்கிய சீனா, ஈரான் வசம் உள்ள ஏவுகணைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றும், அமெரிக்கா எந்த அளவுக்கு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. அதாவது ஈரானிடம் உள்ள Fattah-1, Qader, Kheibar Shekan போன்ற ஏவுகணைகள் ஹைப்பர் சோனிக் வேகத்தில் பயணிக்க கூடியவை. அதாவது ஒலியை விட 5-10 மடங்கு வேகத்தில் வானத்தில் 150 கி.மீ வரை இது பறக்கும். பறக்கும்போது நேர் கோட்டில் இல்லாமல், வளைந்து வளைந்து பயணிக்கும்.
எங்கு சறுக்கியது அமெரிக்கா?
ஆனால், அமெரிக்கா வைத்திருக்கும் வான் பாதுகாப்பு அம்சமான Aegis SM-3 போன்ற அமைப்புகள், வளிமண்டலத்தில் 100 கி.மீ உயரத்தில் வரும் ஏவுகணை மட்டுமே கண்டுபிடிக்கும். எனவே இதை வைத்து ஈரானின் ஏவுகணைகளை கண்டுபிடிப்பது கஷ்டமான வேலை. அதேபோல ஈரான் ஏவுகணைகள் அதிக வெப்பத்தை வெளியிடும். இந்த வெப்பம், இதை பின்தொடரும் இடைமறிப்பு ஏவுகணையின் சென்சாரை குருடாக்கிவிடும். இதனால்தான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகளை ஈரானால் தாக்க முடிந்தது.
பெரிய ஓட்டை
பாதுகாப்பு விஷயத்தில்தான் இப்படி கோட்டை விடுகிறது எனில், தாக்குதல் விஷயத்திலும் அமெரிக்கா கோட்டை விட்டிருக்கிறது. அதாவது, இப்போது வரை அமெரிக்க ராணுவம் Tomahawk வகை ஏவுகணைகளைதான் பயன்படுத்துகிறது என்று சீன ஆய்வு கட்டுரை கூறுகிறது. இது ஒலியை விட குறைந்த வேகத்தில்தான் பயணிக்கும். எனவே இதை இடைமறித்து தாக்குவது எளிது. இவ்வளவு ஒட்டை இருப்பதால்தான் ஈரான் போரில், அமெரிக்கா திணறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications