வெளியேறிய அமெரிக்கா.. வாய்ப்பை சாதகமாக்கி ஆயுதங்களை கைப்பற்றிய தாலிபான்.. ஆப்கன் வீரர்கள் சரண்டர்!
காபுல்; ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்கள், நகரங்களை தாலிபான் கைப்பற்றி வருகிறது. இதில் பல இடங்களில் தாலிபான்களிடம் ஆப்கன் படைகள் சரண்டர் ஆகியுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடமாக அமெரிக்கா நடத்திய மிக நீண்ட போர் முடிவிற்கு வந்துள்ளது. கடந்த வருடம் கத்தாரில் அமெரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் படைக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் தாலிபான் தீவிரவாத தாக்குதல்களை நிறுத்துவதாக இருந்தால், செப்டம்பர் 11, 2021க்குள் அமெரிக்கா படைகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகிறது.
|
வெளியேற்றம்
ஒவ்வொரு ராணுவ தளத்தில் இருந்தும் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பக்ராம் விமானப்படைத்தளத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறியது. கடந்த 20 வருடமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் மிகப்பெரிய கோட்டையாக கருதப்பட்ட விமானப்படைத்தளமாகும் இது. இங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளது.
|
தாலிபான்
இப்படி அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாலிபான் படைகள் ஆப்கனில் நகரங்களை மீண்டும் கைப்பற்ற தொடங்கி உள்ளது. அமெரிக்க படைகள் காலி செய்த மாவட்டங்கள், நகரங்களை தாலிபான்கள் வரிசையாக கைப்பற்றி வருகின்றன. அதோடு அமெரிக்க படைகள் செல்லும் போது மொத்தமாக அனைத்து ஆயுதங்களை எடுத்து செல்வது கிடையாது.

ஆயுதங்கள்
சில நவீன துப்பாக்கிகள், குண்டுகளை மட்டுமே அமெரிக்க படை தங்கள் நாட்டிற்கு மீண்டும் எடுத்து செல்கிறது. மாறாக மற்ற துப்பாக்கிகள், குண்டுகள், ஜீப்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிலேயே அமெரிக்க படை விட்டு செல்கிறது. இந்த ஆயுதங்களை தற்போது கைப்பற்றி வரும் தாலிபான் படைகள் இதை வைத்தே ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகளை மிரட்ட தொடங்கி உள்ளன.

மிரட்டல்
இந்த ஆயுதங்களை வைத்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளை தாலிபான் மிரட்டி அடிபணிய வைக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தாலிபான் படைகளிடம் ஆப்கான் பாதுகாப்பு படைகள் சரண்டர் ஆகி வருகின்றன. அமெரிக்க படைகள் இல்லாததால் அச்சத்தில் மூழ்கி உள்ள ஆப்கன் படைகள், தாலிபானிடம் சரண்டர் ஆகி வருகின்றன. ஆப்கன் படைகள் அவ்வளவு திறமை வாய்ந்த படைகள் கிடையாது.

நிலைமை மோசம்
இதன் காரணமாக 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தாலிபான் ஆப்கானிஸ்தானில் காப்பாற்றி உள்ளது. ஆப்கான் படைகள் இப்படி தாலிபானிடம் சரண்டர் ஆவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் சரண்டர் ஆகும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பு
அதோடு தாலிபான் படைகளுக்கு பயந்து பல்வேறு ஆப்கான் வீரர்கள் அருகே உள்ள தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடி உள்ளனர். கிட்டத்தட்ட 2000 வீரர்கள் வரை இப்படி ஓடி உள்ளனர். இதனால் தாலிபான் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தாலிபான் 2.0 ஆட்சிக்கான தொடக்கமாக இந்த மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.

காபூல்
இந்த நிலையில் இதே நிலைமை நீடித்தால் காபுலை பழையபடி கைப்பற்றுவதற்காக தாலிபான் முயற்சி செய்யும் என்கிறார்கள். காபுலை கைப்பற்றுவதற்காக போர் விரைவில் நடக்கும். அப்போது அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்காது. இதனால் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications