தாலிபன்கள் கையில் ஆப்கானிஸ்தான்.. அமெரிக்கா மட்டுமல்ல உலகமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கைகளில் சென்றுவிட்டது வன்முறை மற்றும் ஆயுத போராட்டத்தின் மூலம் மொத்த நாட்டையும் கைப்பற்றிவிட்டார்கள். இதற்கு முழு முதல் காரணம் அமெரிக்கா. 60 லட்சம் கோடியை செலவழித்தும் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அங்கு நிலவிய கல்வியின்மை முழு முதல் காரணம்

Recommended Video

    Ashraf Ghani கதி | Afghanistan தலைநகர் Kabul-ஐ சுற்றி வளைத்த தாலிபான்கள் | Oneindia Tamil

    ஒருவர் பணத்தால், வீரத்தால் வரும் பலத்தைவிட அவர் பெறும் கல்வியால் பெரும் பலம் தான் அவரை உலகின் வெற்றியாளராக தீர்மானிக்கும்.

    அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் கல்வியறிவு இன்மை பிரிச்சனையை சரி செய்யாமல் ஆயுதத்தின் மூலமும், ராணுவத்தின் மூலமும், பணத்தின் மூலமும் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற அமெரிக்கா, கடைசியில் தலிபான்களுடன் உடன்படிக்கையை ஏற்படுததிக் கொண்டு பின்வாங்கினார்கள் ( தோற்றுப்போனது) என்பதே நிஜமான உண்மை.

    விரட்டியத்த அமெரிக்கா

    விரட்டியத்த அமெரிக்கா

    2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்த பின்லேடன், அமெரிக்காவின் இரட்டை கோபுத்தை தகர்த்ததால் கோபம் கொண்ட அமெரிக்கா, பின்லேடன் உள்ளிட்ட அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்த தலிபான்களை ஓட ஓட விரட்டி அடித்தது.

    தன் பொம்மை அரசு

    தன் பொம்மை அரசு

    ஆட்சி அதிகாரத்தில் தன் சொல் கேட்பவர்களை உட்கார வைத்து மறைமுகமாக அரசை நடத்தியது. ஆனால் அங்கு நிலவிய கல்வியின்மை, வறுமையை சீர் செய்ய அமெரிக்கா பெரியதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பின்லேடனையும், அல்கொய்தாவையும், தலிபான்களையும் தேடிதேடி வேட்டையாடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டியது.

    போதைப்பொருள்

    போதைப்பொருள்

    இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், தலிபான்களை விரட்டிவிட்டு அமெரிக்கா அமைத்த அரசும் , பெரியதாக நிதியுதவி இல்லாமல் சமூக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. மக்கள் வறுமை கொஞ்சம் கூட குறையவில்லை. ஒரு பக்கம் பயங்கரவாதம், மறுபக்கம் வறுமை காரணமாக போதை பொருள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டினார்கள். தாலிபன்கள் வசம் உள்ள பகுதிகளில் ஆர்வம் காட்டினார்கள்.

    தாலிபன்கள், போதைப்பொருள் விற்பனையில் பெரிய வருவாய் ஈட்டி அமெரிக்காவை அசரவைத்தனர். அத்துடன் வெளிநாடுகளின் மறைமுக உதவி, ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதங்கள் அனுப்புவது போன்றவற்றின் மூலமும் பலமாகினர். தலிபான்களின் இருந்த பணம் , செல்வாக்கு, ராணுவ பலம், திறமையான நிர்வாகம் போன்றவை காரணமாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தற்போது ஆயுத போராட்டத்தின் மூலம் வீழ்ததி உள்ளர்கள்.

    60 லட்சம் கோடி

    60 லட்சம் கோடி

    தலிபான்களுக்கு எப்படி வருவாய் அதிகரித்தது என்பதற்கு விடை போதை பொருள் தான் முக்கிய விடை. அதேநேரம் ஏன் அமெரிக்காவால் தலிபான்களை முழுமையாக ஒழிக்க முடியாமல் போனது என்பதற்கு காரணம் பணம் , படை பலம் மட்டும் காரணமல்ல. ஆப்கானிஸ்தானில் நிலவிய வறுமை. கல்வியன்மைதான். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்குப் படி, 2001 - 2019 வரையான காலத்தில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்காக 778 பில்லியன் டாலரைச் செலவழித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவின் உள் துறை அமைச்சகம் போன்ற மற்ற சில அமெரிக்க முகமைகள் எல்லாம் சேர்த்து சுமார் 44 பில்லியன் டாலரை ஆப்கானிஸ்தான் போருக்கு செலவழித்து உள்ளது. ஒட்டுமொத்தத்தில் 822 பில்லியன் டாலர்.

    ஆப்கானிஸ்தான் உதாரணம்

    ஆப்கானிஸ்தான் உதாரணம்

    இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு செலவு செய்தும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை விரட்ட முடியாமல் அமெரிக்கா கடைசியில் அங்குள்ள அரசை கைவிட்டு விட்டு சென்றுவிட்டது. இதில் இருந்து அமெரிக்கா மட்டுமல்ல,, உலகமே கற்க வேண்டிய பாடம் கல்வி தான்.. கல்வியை சரியாக அங்கு கொடுத்திருந்தால் வறுமை ஒழிந்திருக்கும். வறுமை ஒழிந்திருந்தால் தீவிரவாதம் தலை தூக்கியிருந்திருக்காது என்பதே மறுக்க முடியாத உண்மை. உலகில் எங்கெல்லாம் தீவிரவாதம் அல்லது வன்முறைகள் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் வைக்க வேண்டிய ஆயுதம் கல்வி. அதை சரியாக செய்யாமல் விட்டால் எவ்வளவு பலம் இருந்தாலும் உங்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதற்கு ஆப்கானிஸ்தான் சிறந்த உதாரணம்,.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+