காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கன் எம்பிக்கள் இந்தியாவில் தஞ்சம்
காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதும் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்கு வேகத்துடன் நாட்டிற்குள் தலிபான்கள் முன்னேறி வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அவர்கள் காபூலுக்குள் நுழைந்தனர்.

பின்னர் காபூலை கைப்பற்றினர். இதையடுத்து அதிபர் அஷ்ரப் கானியை பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினர். இதையடுத்து அவரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. தஜிகிஸ்தான் சென்றிருக்க கூடும் என தெரிகிறது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வந்த நிலையில் இனி இங்கிருந்தால் பாதுகாப்பு இல்லை என கருதிய அந்நாட்டு அரசியல்வாதிகளும் எம்பிக்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.
வார்தாக் எம்பி வஹிதுல்லா கலீம்ஸாய், பர்வான் எம்பி அப்துல் அஜீஸ் ஹகிமி, எம்பி அப்துல் குவதீர் ஸஸாய், செனேட்டர் மலீம் லாலா குல், முன்னாள் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயின் உறவினரும் முன்னாள் எம்பியுமான ஜமீல் கர்ஸாய், பாக்லான் எம்பி சுக்ரியா எசாகையில், செனேட்டர் என்ஜினியர் முகமது கான், முன்னாள் நிதியமைச்சர் அப்துல் ஹாதி அர்கண்டிவால், முன்னாள் துணை அதிபர் யூனுஸ் க்வனூனியின் சகோதரர் முகமது ஷரீப் ஷரீபி, எம்பி மரியம் சோலைமான்காலி, ஆப்கானிஸ்தான் மேலவையின் மூத்த ஆலோசகர் குவைஸ் மோவாபாஃக் உள்ளிட்டோர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நல்லுறவு நீடித்து வருகிறது. தலிபான்களின் கை ஓங்கி வந்த நிலையிலேயே இந்தியா பாதுகாப்பானது, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு எளிதில் அணுகும் நாடு என்பதால் இங்கு அந்த நாட்டு மக்கள் தஞ்சமடைந்த நிலையில் தற்போது அந்நாட்டு அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications