நான் இயேசுவின் தூதுவர்.. 3ஆவது நாள் நானும் உயிர்த்தெழுவேன்.. சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி
ஜாம்பியா: ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் தான் இயேசுவின் தூதுவர் என்றும் தன்னை புதைத்தால் 3 நாட்களுக்கு பிறகு உயிர்த்தெழுவேன் என்றும் கூறி மண்ணில் புதைந்த பாதிரியார் ஜேம்ஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயேசு கிறிஸ்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த பிறகு கல்லறையில் அடைக்கப்பட்ட அவர், இறப்பை வென்று 3ஆவது நாள் உயிர்த்தெழுந்தார். அந்த 3ஆவது நாளை கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறாக கொண்டாடி வருகிறார்கள். அதாவது புனித வெள்ளியிலிருந்து மூன்றாவது நாள் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.
இதை போல் ஆப்பிரிக்காவில் பாதிரியார் ஒருவர் தான் இயேசுவின் தூதுவர் என கூறிக் கொண்டு அவர் செய்த செயல்களால் உயிரிழ்ந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

ஜாம்பியா
ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவை சேர்ந்தவர் பாதிரியாரான ஜேம்ஸ் சக்காரா (22). இவர் இயேசுவின் தூதர் என்று தன்னை அறிவித்துக் கொண்டார். பின்னர் இயேசுவை போல் தானும் 3 நாட்களில் உயிர்த்தெழுவேன் என கூறியிருந்தார். இதையடுத்து அவர் இருக்கும் தேவாலயம் பகுதியில் ஒரு இடத்தில் குழித்தோண்டினார்.

குழியில் புதைந்த பாதிரியார்
அதில் தன்னைத் தானே புதைத்துக் கொண்டார். அப்போது அவர் பைபிளில் உள்ள இயேசுவின் பொன்மொழிகளை படித்தார். சவக்குழியில் படுத்த பாதிரியாரின் கைகளை மற்ற பாதிரியார் கட்டியுள்ளார். பின்னர் மணலை போட்டு அந்த சவக்குழியை மூடியுள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு இவர்கள் அந்த சவக்குழியை தோண்டி பார்த்தனர். அப்போதுதான் பாதிரியார் உயிரிழந்தது தெரியவந்தது.

தலைமறைவு
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பாதிரியாரின் உடலை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கைகளை கட்டி இந்த உயிரிழப்புக்கு துணை போன இன்னொரு பாதிரியாரை கைது செய்தனர்.

ஜேம்ஸுக்கு உதவி
பாதிரியார் ஜேம்ஸுக்கு உதவியாக இருந்த இரு ஊழியர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இறந்து போன பாதிரியாரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். குழியில் புதையும் சம்பவத்தை ஜேம்ஸ் வேறு யாரிடமும் கூறாமல் இருவரிடம் மட்டுமே கூறி அவர்களின் ஒத்துழைப்போடு இதை செய்துள்ளது தெரியவந்தது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications