அப்ரிதியின் மகள் புற்றுநோயால் மரணம்: தீயாக பரவிய போட்டோ- உண்மை என்ன?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிதியின் இரண்டாவது மகள் புற்றுநோயால் இறந்துவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதியின் இரண்டாவது மகள் அஸ்மராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
Pak Cricketer Shahid Afridi's Daughter Passed Away! Rest her soul in jannat pic.twitter.com/Fs7Kiq4xv8
— Irshad Shabnum (@IrshadShabnum) April 25, 2016
இந்நிலையில் சிறுமி ஒருவரின் புகைப்படமும், மற்றும் அவர் இறந்து அவரின் உடலில் ரோஜா இதழ்கள் இருப்பது போன்ற புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்துடன் அப்ரிதியின் மகள் இறந்துவிட்டார், அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்ரிதியின் மகள் புற்றுநோயால் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. ஆனால் உண்மையில் சிறுமி அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார். இந்த வதந்தி பரவ காரணமே அப்ரிதி மருத்துவமனையில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது தான்.
May ALLAH Bless Her With Long & Healthy Life Ameen
— ❤ AHMADBIGGESTFAN❤ (@Shahzadi_Aresha) March 31, 2016
Get Well Soon Dear Asmara @SAfridiOfficial @nsaafridi pic.twitter.com/9mDfOix4Ij
அந்த புகைப்படத்தில் அஸ்மரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். இதனால் தான் ஆளாளுக்கு அவர் இறந்துவிட்டார் என்று பேசத் துவங்கினர்.












Click it and Unblock the Notifications