லிட்டில் இந்தியா கலவரம்: பொது இடங்களில் மது அருந்த சிங்கப்பூரில் கட்டுப்பாடு!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற கலவரம் காரணமாக சிங்கப்பூரில் பொது இடங்களில் மது அருந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 295 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 57 பேர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுபோன்ற கலவரங்கள் இனி நடைபெறாமல் தடுக்க சிங்கப்பூர் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

After Little India riots, Singapore restricts drinking in public places

சிங்கப்பூரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால் எங்கும் வாங்க முடியும். அதேபோல், பொது இடங்களில் மது குடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சிங்கப்பூரில் பொது இடங்களில் மது குடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி, கலவரப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் வேற்று நபர்கள் இருக்கிறார்களா? என்பதை கண்டறிய போலீசார் எந்த நேரமும் சோதனையிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் விற்கவும், பொது இடங்களில் குடிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, லிட்டில் இந்தியா பகுதியில் தற்போது இரவு 8 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டம் முதலில் அங்கு அமலுக்கு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+