Ali Khamenei: ஈரானில் டிராபிக் கேமரா, மொபைல் நெட்வொர்க்கை ஹேக் செய்த இஸ்ரேல்.. கமேனியை கொன்றது இப்படி தான்!
தெஹ்ரான்: ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ali Khamenei) மற்றும் அவரது மகள், மருமகன், உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஈரானில் கமேனி இருப்பிடத்தை கண்டறிய இஸ்ரேல் மற்றும் சி ஐஏ உளவு அமைப்புகள் நீண்ட காலமாக கண்காணிப்பு செய்தது, டிராபிக் கேமரா, மொபைல் போன் நெட்வொர்க்குகளும் கண்காணிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் கமேனி எங்கு, எப்போது இருப்பார்கள் என்பதை துல்லியமாக கண்டறிய முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

திட்டமிட்டு குறி வைத்து தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. ஈரானில் முக்கிய தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியும் கொல்லப்பட்டார்.
தெஹ்ரானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கமேனியின் மாளிகை ஈரானில் மிகவும் புனிதமான இடமாக பார்க்கப்படுகிறது. இந்த வீட்டில் அயதுல்லா அலி காமேனி 1989 முதல் வசித்து வந்தார். ஈரானில் கமேனியை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது. இதனால், கமேனி பாதாள அறைகளுக்கு பாதுகாப்பாக சென்று இருக்கலாம் என முதலில் சொல்லப்பட்டது.
அலி கமேனியின் மாளிகை தரைமட்டம்
ஆனால், அவரது மாளிகையிலே இருந்ததும், அமெரிக்கா, நடத்திய அட்டாக்கில் அயதுல்லா அலி கமேனியின் மாளிகை தரைமட்டமானதும் முதலில் தெரியவந்தது. சற்று நேரத்தில் கமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்.
இதனை ஈரானும் உறுதி செய்தது. கமேனி மட்டுமின்றி ஈரான் உயர்மட்ட தளபதிகளான அலி ஷம்கானி மற்றும் முகமது பக்கூபூர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். மேலும் அயதுல்லா அலி காமேனியின் மகள், மருமகன், பேத்தி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மொபைல் நெட்வொர்க்கை ஹேக் செய்து
கமேனி கொலை செய்ய அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலானது திடீர் நடவடிக்கையாக அல்லாமல், பல ஆண்டுகள் நீண்ட உளவுத்துறை திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, தெஹ்ரானில் உள்ள பெரும்பாலான போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் பல ஆண்டுகளாக ஹேக் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, கமேனி வசித்த மற்றும் பணியாற்றிய தெஹ்ரானின் பாஸ்தூர் தெரு பகுதியில் உள்ள கேமராக்கள் மூலம் அங்குள்ள அன்றாட நகர்வுகள் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மூத்த ஈரான் அதிகாரிகள் அந்த வளாகத்திற்கு வரும் நேரங்கள், அவர்கள் பயன்படுத்திய பாதைகள், பணிநேரங்கள், வீட்டு முகவரிகள் உள்ளிட்ட பல தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டு
மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள் யாருடன் அதிகமாகச் செல்வார்கள், யாரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள் என்பதையும் அல்காரிதங்கள் மூலம் பகுப்பாய்வு செய்து, கமேனியின் ஃபேட்டர்ன் லைப் எனப்படும் வாழ்க்கை முறை வரைபடம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
போக்குவரத்து கேமராக்கள் மட்டுமின்றி, மொபைல் போன் நெட்வொர்க்குகளும் கண்காணிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கமேனி எங்கு, எப்போது இருப்பார்கள் என்பதை துல்லியமாக கண்டறிய முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறை
சனிக்கிழமை காலை கமேனி அலுவலகத்தில் இருப்பார் என்பதையும், அவருடன் யார் யார் இருப்பார்கள் என்பதையும் துல்லியமாக கண்டறிய, நேரடி போக்குவரத்து தரவுகளை கண்காணித்தது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத்துறை (CIA)பயன்படுத்திய முக்கியமான முறைகளில் ஒன்றாக இருந்துள்ளது.
தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள தலைமை வளாகத்தில் சனிக்கிழமை காலை கூட்டம் நடைபெறவிருந்தது என்பதை இஸ்ரேல் உளவுத்துறை முன்கூட்டியே கண்டறிந்துள்ளது. இதையடுத்து தாக்குதல் முன்னதாகவே முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக, அந்த இடத்தில் கமேனி இருப்பார் என்ற தகவலை அமெரிக்க மத்திய உளவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன?











Click it and Unblock the Notifications