இஸ்ரேலுக்கு இனி குடைச்சல் தான்.. ஈரானுக்கு ஆதரவாக மீண்டும் களமிறங்கும் அமைப்பு.. யார் இது பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்க உள்ளதாக இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அறிவித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு புதிய குடைச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையாக மோதல் நடந்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க இஸ்ரேல், அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த வாரம் 12ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்கியது. பதிலுக்கு ஈரானும் ஏவுகணைகளை வைத்து தாக்கியது. இதனால் இருநாடும் இடையே யுத்தம் நடந்து வருகிறது.

all-forms-of-support-to-be-given-to-iran-says-hezbollah-leader-sheikh-naim-aqssem

இதில் இன்னும் அமெரிக்கா நுழையவில்லை. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஈரானுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறது. ஈரான் தாக்குதலை கைவிட்டுவிட்டு இஸ்ரேலிடம் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது.

இதற்கு ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி மறுப்பு தெரிவித்துள்ளார். ஈரான் ஒருபோதும் சரணடையாது. இஸ்ரேலுக்கு, அமெரிக்கா ஆதரவு தெரிவித்தால் அந்த நாட்டின் விமானப்படை தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். இதனால் டிரம்பும் கோபமாகி உள்ளார். அதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விமானங்கள், போர்க்கப்பல்களை டிரம்ப் குவித்து வருகிறார். அதோடு எப்போது வேண்டுமானாலும் ஈரானை அமெரிக்கா தாக்கலாம் என்ற நிலை தான் அங்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவுகளையும் வழங்குவோம் என்று லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு ஏற்கனவே ஹெஸ்புல்லா எதிர்ப்பு தெரிவித்தது. இஸ்ரேலும், லெ பனானும் அண்டை நாடுகளாகும். இதையடுத்து இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து இஸ்ரேலை சீண்டாமல் ஹெஸ்புல்லா அமைதி காத்தது. தற்போது ஈரானுக்கு அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதாக ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஹெஸ்புல்லாவின் தலைவர் செய்க் நயிம் காசீம் கூறியதாவது: ஈரான் யாருக்கும் சிறிதும் கூட ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஈரானின் அணுஆயுத தயாரிப்பு யாருக்கும் எதிரானது இல்லை. வெளிநாட்டு உதவி, பயிற்சி இன்றி சொந்த திறமையை நம்பி ஈரான் தனது பிராந்தியத்தின் முன்னேற்றத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

உலக நாடுகள் ஈரானின் அணுஆயுத தயாரிப்பு எதிரானதாக இல்லை. ஈரானின் நம்பிக்கை, அறிவு மற்றும் சுதந்திரம் உள்ளிட்டவற்றுக்கு எதிரானதாக உள்ளது. அமெரிக்கா இந்த பிராந்தியத்தை பதற்றதில் வைக்க நினைக்கிறது. அதேபோல் உலகத்தை நெருக்கடியில் வைக்க விரும்புகிறார். ஆனால் அமெரிக்கா அந்த முயற்சியில் தொடர்ந்து தோற்று வருகிறது. எங்களுக்கு ஈரானுடன் நிற்க முழு உரிமை உண்டு. நாங்கள் எங்கள் சுதந்திரம், எங்கள் நிலத்தின் விடுதலை உள்ளிட்டவற்றுடன் சுதந்திரமாக நிற்கிறோம். அனைத்து மக்களும் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவருக்கு கீழ் அணிதிரண்டு வலிமையுடன் நிற்க வேண்டும்'' என்றார்.

இதற்கிடையே தான் அமெரிக்காவுக்கான துருக்கியின் தூதருமான தாமஸ் பராக், ஹெஸ்புல்லாவுக்கு கடும் வார்னிங் கொடுத்துள்ளார். இவர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு சென்றார். அங்கு லெபனான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நபிபெரியை சந்தித்து பேசினார். அதன்பிறகு தாமஸ் பராக், ‛‛இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஹெஸ்புல்லா இணைய கூடாது. ஹெஸ்புல்லா போருக்குள் நுழைவது மோசமான முடிவாக இருக்கும். இதை நான் டொனால்ட் டிரம்ப் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+