இந்தியாவை மிரட்டும் டிரம்ப்.. பிரிக்ஸ் கரன்சியால் 100% வரியா? ரஷ்யா தந்த முக்கிய விளக்கம்
மாஸ்கோ: உலகளாவிய வர்த்தகத்துக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் அமெரிக்க டாலருக்கு பதில் பிரிக்ஸ் கரன்சி அல்லது பிற கரன்சிகளை பயன்படுத்தினால் 100 சதவீதம் கூடுதல்வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த மிரட்டல் என்பது இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா சார்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகி உள்ள டொனால்ட் டிரம்ப தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய இந்த அறிவிப்புகள் பல நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் இருந்து ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள சுமார் 18 ஆயிரம் இந்தியர்களும் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இதுதவிர அண்டை நாடாக உள்ள கனடா, மெக்சிகோ உள்ளிட்டவற்றின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு என்பது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோல் இந்தியா, ரஷ்யா, சீனா உள்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளையும் டொனால்ட் டிரம்ப் சீண்டி வருகிறார்.
இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அதாவது தற்போது வர்த்தகங்கள் அனைத்தும் அமெரிக்கா டாலர் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாற்றும் வகையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது உருவாக்கும் பட்சத்தில் அது அமெரிக்க டாலர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அமெரிக்கா அஞ்சி நடுங்கி வருகிறது. அதோடு பிரிக்ஸ் நாடுகளுக்கு தொடர்ந்து டிரம்ப் வார்னிங் செய்து வருகிறார். பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும். பிரிக்ஸ் கரன்சி உள்பட பிற கரன்சிகளை பயன்படுத்தினால் 100 சதவீத வரி விதிக்கப்படும். அதோடு அமெரிக்காவை மறந்துவிட வேண்டியது தான் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இதன்மூலம் இந்தியா, ரஷ்யா, சீனா உள்பட பிரிக்ஸ் கூட்டமைப்பின் 10 நாடுகளையும் டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்நிலையில் தான் டிரம்ப் கருத்துக்கு நடுவே பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்றான ரஷ்யா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெளிவுப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் பிரிக்ஸ் கரன்சி உள்பட பிற கரன்சிகளை வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. அதேவேளையில் கூட்டு முதலீடு திட்டங்களை வகுப்பதில் தான் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் மத்திய வெளியுறவுத்துறையும் ஏற்கனவே பிரிக்ஸ் கரன்சி உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று உறுதியாக கூறி உள்ளது. ஆனாலும் டொனால்ட் டிரம்புக்கு பிரிக்ஸ் நாடுகள் மீது ஒரு அச்சம் உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றாக இணைந்து உலகாவிய வர்த்தகத்துக்கு புதிய கரன்சியை பயன்படுத்தினால் அது அமெரிக்காவுக்கும், அமெரிக்கா டாலருக்கும் மாற்றாக வந்துவிடும். இதனால் டாலரின் மதிப்பு என்பது சரிந்து விடுமோ? என்ற அச்சம் டொனால்ட் டிரம்ப் நினைக்கிறார்.
இதனால் தான் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதும் சரி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றபோதும் சரி தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளை குறிவைத்து அமெரிக்க டாலருக்கு மாற்றாக பிற கரன்சிகளை பயன்படுத்தினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தொடர்ந்து மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications