குடும்பத்தையே பிணைக்கைதிகளாக பிடித்து 911க்கு போன் செய்ய வைத்த கோபக்கார பூனை
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏழு மாதக் குழந்தை ஒன்றை பிணைக்கைதியாக பிடித்ததன் மூலம் மொத்தக் குடும்பத்தையுமே அறைக்குள் அடைத்து வைத்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த கோபக்காரப் பூனை ஒன்று.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவர் லீ பால்மர். இவரது வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக பூனை ஒன்றை வளர்த்து வருகின்றனர். சுபாவத்திலேயே சற்றுக் கோபக்காரப் பூனையாம் அது.
சம்பவத்தன்று, ஏதோ கோபத்தில் தனது பூனைக்கு ஒரு உதை கொடுத்துள்ளார் லீ. இதனால் ஆத்திரமடைந்த அப்பூனை லீயின் ஏழு மாதக் குழந்தைக்கு அருகில் சென்று அதனைத் தாக்க முயற்சி செய்துள்ளது.
இதனால் பயந்து போன லீ குடும்பத்தார் பூனையிடமிருந்து குழந்தையைப் பாதுகாப்பாக மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்கள் அறையை விட்டு வெளியேற முயற்சித்தாலே படத்தில் வில்லன்கள் செய்வது போல் குழந்தையை தாக்குவது போல் ஆக்ஷன் செய்துள்ளது அந்த கோபக்காரப் பூனை.
சுமார் 10 கிலோ எடை கொண்ட அப்பூனையிடலிருந்து தங்கள் குழந்தையை மீட்க 911க்கு போன் செய்து போலீசின் உதவியை நாடியுள்ளார் லீ. போனிலேயே பூனையின் கர்ஜனையைக் கேட்ட போலீசார் விரைந்து செயலாற்றி குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.












Click it and Unblock the Notifications