குவைத்தில் இந்தியப் பெண் கத்தியால் குத்தி படுகொலை.. கணவர் வெறிச்செயல்.. போலீஸ் வலைவீச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குவைத்: குவைத்தில் இந்தியப் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் அப்பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர்.

குவைத் நாட்டில் உள்ள கெய்தான் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு இந்திய தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த குடியிருப்பில் வசித்து வந்த இந்தியப் பெண் கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

An Indian woman was beaten and stabbed to death in Kuwait

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், உடல் முழுவதும் காயங்களும் தழும்புகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொல்லப்பட்ட பெண் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அவருடைய கணவர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அவர் தான் தனது மனைவியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் அந்தப் பெண்ணின் கணவரையும், இந்த கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An Indian woman was beaten and stabbed to death in a suburb of Kuwait city, a media report said. Her body was found in a pool of blood at a flat and the woman’s husband is missing, according to the report.
Please Wait while comments are loading...