'மன்னிப்பு கேட்டும் விடவில்லை'.. இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட்.. பாகிஸ்தானில் பரபரப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு அதிகரித்தது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் சரியான நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோடு, கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றன.

இம்ரான் கான்
இதன் காரணமாக இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்தது. இதில் புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் பிரதமராக இருந்த இம்ரான் கான் எதிர்க்கட்சி தலைவராக ஆனதால் ஆளும் ஷெபாஸ் ஷெரிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பெண் நீதிபதிக்கு மிரட்டல்?
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், நீதிபதி ஒருவருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குறிப்பிட்ட நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு நிலவியது.

ஆபத்தானவனாக மாறுவேன்
எனினும், நீதிமன்றத்தை அணுகி இம்ரான் கான் முன் ஜாமீன் பெற்றார். இதனால், கைதில் இருந்து இம்ரான் கான் தற்காலிகமாக தப்பியிருந்தார். எனினும் அடுத்த விசாரணையின் போது, இம்ரான் கான் தான் திட்டமிட்டு அப்படி பேசவில்லை என்று கூறினார்.. ஆனால், இம்ரான் கானின் விளக்கத்தை நிராகரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது. நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த இம்ரான் கான், என்னை மட்டும் ஜெயிலுக்கு அனுப்பினால் நான் இன்னும் ஆபத்தானவனாக மாறுவேன். நான் அதிகம் பேசப்போவது இல்லை. ஏனென்றால் எனது கருத்தை திரித்து விடுகிறார்கள் என்றார்.

கைது வாரண்ட்
தொடர்ந்து அடுத்த விசாரணையின் போது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி இம்ரான் கான் பேசினார். அப்போது தனது பேச்சுக்கு இம்ரான் கான் மன்னிப்பு கோருவதாக கூறினார். எனினும் அவரது விவாதத்தை ஏற்றுக்கொள்ளாத கோர்ட்டு தற்போது அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications