அடுத்தடுத்து.. 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் என்ன ஆகும்.. இதோ வெளியானது ரிசல்ட்..!
2 தடுப்பூசிகளை அடுத்தடுத்து செலுத்தியதன் ஆய்வு வெளியாகி உள்ளது
மாஸ்கோ: அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை 2 தவணைகளாக அடுத்தடுத்து செலுத்தி கொண்டால் 85 சதவீதம் பேருக் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து, சிகிச்சை இல்லாவிட்டாலும் தடுப்பூசிகளே பெருமளவு ஆதரவாக இருந்து வருகின்றன.. அந்த வகையில், உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன..
ஆனால், எந்தவொரு தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் 2வது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.. உலக மக்களும் இதையேதான் பின்பற்றி வருகின்றனர்.

அஸ்ட்ரோ ஜெனேகா
அதே நேரத்தில் முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், 2வது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் செலுத்தி கொள்ளலாமா? அவ்வாறு செலுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்ற ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியானது, கொரோனா வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

இந்தியா
இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் இருக்கிறது.. இதுதான் உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக்கூடியதாகும்.. அதேபோல, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியின் இன்னொரு வடிவம்தான் ஸ்புட்னிக் லைட் என்பதாகும்.. இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய 2 தடுப்பூசிகளையும் 2 தவணைகளாக, அதுவும் அடுத்தடுத்து செலுத்திக் கொண்டால் எப்படி இருக்கும் என்ற ஆய்வு நடத்தப்பட்டது..

100 பேர்
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் அஜர்பைஜான் நாட்டில் இந்த ஆய்வு கடந்த பிப்ரவரில் மேற்கொள்ளப்பட்டது.. இதில் கிட்டத்தட்ட 100 தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.. அதன்படி, அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டது.. பிறகு 29 நாட்கள் கழித்து ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன...

ரிசல்ட்
இதில், முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டன. ரிசல்ட் என்னவென்றால், டோஸ் செலுத்தப்பட்ட 57வது நாட்களில் 85 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்துள்ளதாம்.. இந்த ஆய்வினை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்திலும் மேற்கண்ட 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications