பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஓட்டுநர் உள்பட 13 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயில் ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குயிட்டா-ராவல்பிண்டிக்கு இடையே ஜாபர் எக்ஸ்பிரஸ் எனும் ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் இன்று போலன் மாவட்டத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவரச கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று குவெட்டா நகரின் புறநகர் பகுதியில் ஜாபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளத்துக்கே அருகே குண்டு வெடித்ததில் ரயில்வே ஊழியர்கள் 4 பேர் பலியாயினர் 11 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பலூசிஸ்தான் உள்துறை செயலாளர் அக்பர் ஹுசைன் துரானி கூறுகையில், ரயிலில் பிரேக் பிடிக்காத காரணத்தினால் தடம் புரண்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications