For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூசிலாந்து நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலி.. கடுமையான சேதம்!

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

நியூசிலாந்தில் நேற்று நில நடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து சுனாமி பேரலைகள் நியூசிலாந்தை தாக்கின.

At least 2 dead in powerful New Zealand earthquake

நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் பகுதி நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கமானது 185 பேரை பலி கொண்டது. அது ரிக்டரில் 6.3 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.

அப்போது 11 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின. இந்த நிலையில் நேற்று கிறிஸ்ட் சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட 2 மணிநேரத்துக்கு பின்னர் 6 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின. நியூசிலாந்து அரசும் அவசர நிலையை பிரகடனம் செய்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு பிரதமர் ஜான் ஹே தெரிவித்தார்.

English summary
At least two people were killed after a powerful earthquake struck New Zealand near the city of Christchurch early Sunday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X