கவனக் குறைவால் 200 நோயாளிகளைக் ‘கொன்ற’ ஆஸி. மருத்துவமனை... மன்னிப்பு கோரியது!
சிட்னி: ஆஸ்திரேலிய மருத்துவமனை ஒன்று தவறுதலாக 200 நோயாளிகளை இறந்து விட்டதாக அறிவித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தனது இம்மாபெரும் தவறுக்கு அம்மருத்துவமனை மன்னிப்புக் கோரியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் மெல்போர்ன். இக்குள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என அறிவித்துவிட்டது.
சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளில் கவனக்குறைவாக இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டு விட்டதாக அம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்/
பின்னர், தங்களது தவறு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அனைத்து நோயாளிகளிடமும் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியது. மேலும் இந்தத் தவறு குறித்து அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர் என்றும், இதனால் நோயாளிகளின் கவனிப்பு பாதிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்தது.
ஆனபோதும், ஆரோக்கியம் பெற்று வீடு திரும்பிய நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளில் இறந்து விட்டதாக எழுதப்பட்டிருந்தது ஏற்றுக்கொள்ளமுடியாத தவறு என்று தெரிவித்துள்ளது ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம்.
இத்தவறை இழைத்த ஊழியர்களுக்கு தக்க தண்டனை உண்டு என மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அதிகப்படியான பணிச் சுமையே இத்தகைய தவறிற்குக் காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications