ஃபிரான்ஸில் மசூதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்
ஃபிரான்ஸின் தெற்கு பகுதியில், மசூதி ஒன்றிற்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு, அவீன்யோங்கில் உள்ள அராமா மசூதியிலிருந்து வழிபாட்டாளர்கள் வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில் ஹூட் ( சட்டையுடன் தைக்கப்பட்ட ஒரு வித முக்காடு) அணிந்திருந்த சந்தேக நபர்கள் இருவர் அவர்களை நோக்கி வந்தனர்.
சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கியும், சிறிய துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தனர் என்றும் காரிலிருந்து இறங்கி வந்து கூட்டத்தை நோக்கி சுட்டனர் என்றும் ஃபிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இதை பயங்கரவாத தாக்குதலாக கருதவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
- ஜிஎஸ்டி: கற்பனையும் உண்மையும் - 7 முக்கிய தகவல்கள்
மசுதிக்கு வெளியே நான்கு பேர் காயமடைந்தனர்; மேலும் 50மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் 7 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், துப்பாக்கிச் சூட்டில் சிதறிய பொருட்களால் காயமடைந்தனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக ல பிரொவென்ஸ் என்ற அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
காயமடைந்த எட்டு பேரில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மசூதியிலிருந்து வெளியே வந்தவர்கள் தாக்குதல்தாரிகளின் இலக்குகள் அல்ல என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவீன்யோங் தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகக் கருதப்படமாட்டாது என அரச வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. லாரே சபாட் என்ற மாவட்ட நீதிபதி, இது இரண்டு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
வியாழனன்று பாரிசின் புறநகர்ப் பகுதியான க்ரெட்டெயில், மசூதி ஒன்றின் முன்னிருந்த கூட்டத்திற்குள் கார் ஏற்ற முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அதில் யாரும் காயமடையவில்லை.
ஏப்ரல் மாதத்தில் பாரிஸ் போலிஸார் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் மற்றும் சமீப வருடங்களில் நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, ஃபிரான்ஸில் அதிகப்படியான பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசியின் பிற செய்திகள்:
பிரான்ஸ் அதிபர் மக்ரோங் வருகை எதிரொலி: அல்-கய்தா வீடியோவில் மாலி பிணைக் கைதிகள்
தேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக்
யு டியூபில் பிரபலமாக நினைத்து விபரீத செயலில் ஈடுபட்ட அமெரிக்க தம்பதியர்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்














Click it and Unblock the Notifications