இந்தியாவை சீண்டிய வங்கதேசம்.. ரூ.180 கோடி ஆர்டரை ரத்து செய்த முகமது யூனுஸ்.. இதுதான் பதிலடியா?
டாக்கா: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு உரிய முறையில் நம் நாடும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டுடன் பாதுகாப்பு துறை நிறுவனத்துடன் போடப்பட்டு இருந்த ரூ.180.25 கோடி ஒப்பந்தத்தை வங்கதேசம் திடீரென்று ரத்து செய்துள்ளது. இதன்மூலம் மீண்டும் நம்மை வங்கதேசம் சீண்ட தொடங்கி உள்ளது.
வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை நம் நாட்டுடன் நல்ல நட்பில் இருந்தார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையானதால் ஷேக் ஹசீனா நம்நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

முகமது யூனுஸ் பாகிஸ்தான், சீனா ஆதரவாளர் என்று சொல்லப்பட்டது. அதன்படியே அவர் சீனா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்க தொடங்கினார். இதனால் இந்தியா - வங்கதேசம் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது நம் நாட்டை மீண்டும் சீண்டியுள்ளார் முகமது யூனுஸ். அதாவது நம் நாட்டின் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் கொல்கத்தாவில் கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயர் கார்டன் ரீச் ஷஇப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமெிடெட் என்பதாகும். சுருக்கமாக ஜிஆர்எஸ்இ என்பார்கள்.
இந்த நிறுவனத்துடன் ரூ.180.25 கோடி மதிப்பில் இழுவை கப்பலுக்கான ஒப்பந்தத்தை வங்கதேசம் போட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தை தான் தற்போது வங்கதேசம் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமெிடெட் நிறுவனம், ‛‛வங்கதேசம் அரசு போட்ட இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நம் நாட்டுக்கு வங்கதேசம் கொடுத்த பதிலடியாக பார்க்கப்படுகிறது. அதாவது கொரோனா பரவலின்போது நம் நாட்டின் துறைமுகம், விமான நிலையங்களை பயன்படுத்தி வங்கதேசம் தனது பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் சீனாவுக்கு சென்ற முகமது யூனுஸ் நம் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து பேசியிருந்தார். இதனால் கோபமான மத்திய அரசு நம் நாட்டின் துறைமுகம், விமான நிலையங்களை வங்கதேசத்தின் சரக்கு பயன்பாட்டுக்கு வழங்கும் அனுமதியை அதிரடியாக ரத்து செய்தது. இது வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட சரக்கை நம் நாட்டின் வழியாக நேரடியாக வங்கதேசம் ஏற்றுமதி செய்யும்போது அது குறைந்தது. இப்போது நம் நாடு அனுமதி மறுத்துள்ளதால் வங்கதேசம் தனது கடல் மார்க்கம் மற்றும் விமான நிலையங்களை நம்பியே பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. வங்கதேசத்தை பொறுத்தவரை விமான நிலையங்களில் சரக்கு முனையங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இது வங்கதேசத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அனுமதி ரத்துக்கு பதிலடியாக தான் வங்கதேசம் நம் நாட்டின் பாதுகாப்பு துறையுடன் போட்ட கடல் இழுவை கப்பலுக்கான ரூ.180.25 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications