வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு
டாக்கா: வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் நேற்று சுமார் 150 பயணிகளுடன் சென்ற படகு சரக்கு கப்பல்களை இழுத்து செல்லும் இழுவை படகு மோதி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாணிக்கஞ்ச் மாவட்டம் தவ்லத்டியா-பட்டுரியா பகுதியின் அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு படகு மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 66 பேர் பலியானதாகவும், சுமார் 50 பேர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நீந்திவந்து கரை சேர்ந்ததாக தெரிவித்துள்ளனர். கைப்பற்ற 66 உடல்களில் குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீரில் மூழ்கிய சுமார் 100 பேரை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கதேச கப்பல் துறை அமைச்சர் சாஜன் கான், இந்த படகு விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் படகு ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications