யு.எஸ்.: சுவரில் 'வோட் ஃபார் டிரம்ப்' என எழுதி கருப்பினத்தவர்களின் தேவாலயத்திற்கு தீ வைப்பு
மிசிசிப்பி: அமெரிக்காவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருப்பினத்தவர்களின் தேவாலயத்திற்கு தீ வைத்து அதன் சுவர்களில் டிரம்புக்கு வாக்களியுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் கிரீன்வில்லில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருப்பினத்தவர்களின் தேவாலயமான ஹோப்வெல் மிஷனரி பாப்டிஸ்ட் தேவாலயம் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு யாரோ தேவாலயத்திற்கு தீ வைத்துவிட்டனர்.
'Vote Trump' painted on black church set ablaze in Mississippi https://t.co/IOI0oy7TaA pic.twitter.com/nPJYYhOzOJ
— CNN (@CNN) November 2, 2016
மேலும் தேவாலய சுவர்களில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்புக்கு வாக்களிக்குமாறு எழுதியுள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த தேவாலயம் எரிந்து நாசமாகிவிட்டது.
இது குறித்து கிரீன்வில் போலீஸ் அதிகாரி டெலான்டோ வில்சன் கூறுகையில்,
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவாலய சுவரில் டிரம்புக்கு வாக்களிக்குமாறு எழுதியுள்ளது மக்களை எரிச்சல் அடைய செய்துள்ளது என்றார்.
இது குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. டிரம்ப் இன பிரச்சனையை தூண்டுவதாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications