ஈவு இரக்கமின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 150 முஸ்லீம்களை கொன்ற போக்கோஹரம் தீவிரவாதிகள்
போர்னோ: வடக்கு நைஜீரியாவில் உள்ள 3 கிராமங்களுக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் மசூதிகளில் தொழுது கொண்டிருந்த ஆண்கள், குழந்தைகள் மற்றும் வீடுகளில் சமையல் செய்த பெண்கள் என 150 முஸ்லீம்களை கொலை செய்துள்ளனர்.
போக்கோ ஹரம் தீவிரவாதிகள் வடக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தில் இருக்கும் 3 கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள மசூதிகளில் தொழுது கொண்டிருந்த ஆண்கள், குழந்தைகளை கொலை செய்தனர். மேலும் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண்களையும் கொலை செய்து வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 150 முஸ்லீம்கள் பலியாகியுள்ளனர்.

இருப்பதிலேயே குகாவா கிராமத்தில் தான் அதிகமானோர் பலியாகியுள்ளனர். குகாவா கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 97 பேர் பலியாகினர்.
நோன்பு திறந்துவிட்டு மஹ்ரிப் தொழுகை தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களைத் தான் தீவிரவாதிகள் குறி வைத்து தாக்கி கொலை செய்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த கோலோ என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குகாவா கிராமத்தைச் சேர்ந்த அரபி ஆசிரியர் மலாமி அப்துல் கரீம் கூறுகையில்,
தீவிரவாதிகள் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொன்றுள்ளனர். அவர்கள் தங்கள் தந்தைகளுடன் மசூதியில் தொழுது கொண்டிருந்த 4 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளைக் கூட சுட்டுக் கொலை செய்தனர் என்றனர்.
தீவிரவாதிகள் 3 கிராமங்களில் பலரை கொன்றதுடன் 2 கிராமங்களை தீ வைத்து எரித்துவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications