பாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு.. காபூலில் பயங்கரம்.. பலர் படுகாயம்!
ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இன்று காலை பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். லாகூரில் தாதா தர்பார் மசூதிக்கு வெளியே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.

இந்த தாக்குதலின் சுவடுகள் மறையும் முன் தற்போது ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. காபூலில் உள்ள ஷார் நாவ் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அங்கிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்களை குறிவைத்து காரில் இந்த குண்டு வைக்கப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது.
இதில் சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுக்க இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். ஆப்கானிலும் மக்கள் ரம்ஜான் மாதத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மோசமான தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தாக்குதலுக்கும் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications