பாகிஸ்தானில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி.. பலர் படுகாயம்!
பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
இது ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுக்க இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். அதிகாலையில் தொழுது நாள் முழுக்க உணவு அருந்தாமல் இவர்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் தாதா தர்பார் மசூதிக்கு வெளியே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற இருக்கிறது. இந்த தாதா தர்பார் மசூதி சூஃபி மக்கள் வழிபாடு நடத்தும் மசூதி ஆகும். இது ஆசியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று.
இதற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. முக்கியமாக அங்கு பாதுகாப்பிற்கு இருந்து போலீசார் குறி வைக்கப்பட்டு, இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதேபோல் இந்த பகுதி மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இதுவரை 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயர் வாய்ப்புள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications