பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு.. தற்கொலைப்படை தாக்குதலில் 39 பேர் பலி.. 120 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பக்துன்க்வாவில் பஜவுர் என்ற மாவட்டம் உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் ஜேயூஐ.எப் (JUI-F) அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசியல் கட்சியின் கூட்டத்தில் நூற்றுக்கணக்கனவர்கள் பங்கேற்று இருந்தனர்.

Bomp Blast in Pakistan: 20 killed, More than 50 injured

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டு அங்கும் இங்கும் சிதறி ஓடினர். குண்டு வெடித்ததில் அப்பகுதி முழுவதும் ஒரு நொடி குலுங்கியது. வெடி குண்டு தாக்குதலில் 39 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 120 பேர் படுகாயம் அடைந்தனர்.

கை கால்களை இழந்த நிலையில், பலரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்பு குழுவினர் சேர்த்தனர். காயம் அடைந்தவர்களில் 17 பேர் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

தற்கொலைப்படை தாக்குதல் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும், மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவன் வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக கைபர் பக்துன்க்வா மாகாண அமைச்சர் ரியாஸ் அன்வர் தெரிவித்தார். குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் படுகாயங்களுடன் பலரும் உதவி கேட்டு அலறும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலித்தபடி அப்பகுதியை நோக்கி அணி வகுத்த சென்ற காட்சிகளும் நெஞ்சை உறைய வைக்கும் விதமாக உள்ளது. பாகிஸ்தானின் தேசிய சபை இன்னும் சில வாரங்களில் கலைக்கப்பட இருக்கிறது. வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் அங்கு தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வரும் நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

Bomp Blast in Pakistan: 20 killed, More than 50 injured

பாகிஸ்தானுக்கு சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் குழு பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள அதே நாளில் அங்கு வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது சீனாவையும் அதிர வைத்துள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஜேயூஐஎப் கட்சிக்கு எதிராக சமீப காலமாக் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் உள்ளூர் பிரிவுதான் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

JUI-F பாசாங்கு தனத்துடன் செயல்படுவதோடு விரோத போக்குடன் செயல்படும் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக ஐ.எஸ் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்தே பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானிலேயே இயங்கி வரும் தாலிபான் குழு மற்றும் தெஹ்ரீக் தாலிபான் பாகிஸ்தான் ஆகிய இயக்கங்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக அதிக அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த ஜனவரி மாதம், போலீஸ் வளாகத்திற்குள் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+