பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்த சிறுவனைச் சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்
கலிபோர்னியா: சிறுவர்கள் விளையாட்டைத் தவறாக புரிந்து கொண்ட போலீஸ், நிஜத்துப்பாக்கி எனக் கருதி பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்த சிறுவனை சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள் சாந்தாரோசா என்ற நகரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஆண்டிலோ பாஸ். இவன் தன் நண்பருடைய பொம்மை துப்பாக்கி ஒன்றை எடுத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.
சமீபகாலமாக சிறுவர்கள் வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், சிறுவர்களின் இந்த துப்பாக்கி விளையாட்டைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர், தொலைவில் இருந்து பார்த்த போது சிறுவன் துப்பாக்கி மூலம் தனது நண்பனை மிரட்டுவதாக நினைத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனை சுற்றி வளைத்து துப்பாக்கயை கீழே போடும்படி எச்சரித்துள்ளனர். ஆனால், சூழ்நிலையின் விபரீதம் புரியாமல் குழப்பத்தில் இருந்த சிறுவன் துப்பாக்கியைக் கீழே போடவில்லை.
எனவே, மற்றொரு சிறுவனைக் காப்பாற்றுவதாக நினைத்து போலீசார் ஆண்டிலோவைச் சுட்டுள்ளனர். கிட்டத்தட்ட 7 முறை துப்பாகி சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே ஆண்டிலோ பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும், அருகில் இருந்த 3 பேர் காயமடைந்தனர். பின்னர் சோதனை செய்ததில் ஆண்டிலோ வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications