இங்கிலாந்தில் வீடியோ கேம்ஸ் விபரீதம்: தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன் கைது
லண்டன்: இங்கிலாந்தில் ஆபாச வீடியோ கேம்ஸ் விளையாடிய 13 வயது சிறுவன் அவற்றை செயல்படுத்த நினைத்து தனது 8 வயது சகோதரியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
எக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்த பின்பு அதனை நடைமுறைப்படுத்தி பார்க்க விரும்பியுள்ளான் அந்த சிறுவன். அதற்காக தனது 8 வயது சகோதரியை தேர்வு செய்தான்.
மிகவும் சின்னப் பெண் என்பதால்,நடந்ததை மீண்டும் நினைவில் வைத்திருக்கமாட்டாள், யாரிடமும் கூறமாட்டாள் என்று நினைத்து தனது தங்கையை பலாத்காரம் செய்துவிட்டான்.
சிறுவன் கைது
இதனை அடுத்து சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அச்சிறுவன் குற்றத்தை ஒப்பு கொண்டான். இதனை அடுத்து பிளாக்பர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் அவனை ஆஜர்படுத்தினர். அங்கு சகோதரியை தவறான நடத்தைக்கு பயன்படுத்தியதையும், பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டதையும் சிறுவன் ஒப்பு கொண்டான்.
தனிமை படுத்தப்பட்ட சிறுவன்
இதனை அடுத்து, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவன் தனது உறவினர்களுடன் அனுப்பப்பட்டான். எனினும், சகோதரியிடம் இருந்து தனித்து வைக்கப்பட்டு உள்ளான்.
வீடியோ கேம்ஸ்க்கு தடை
இந்த சம்பவத்தை அடுத்து அந்நாட்டு அரசு, 2014ம் ஆண்டு இறுதிக்குள், வீடியோ கேம்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உட்பட இன்டெர்நெட் கருவிகள் கொண்டு வயதுக்கு வந்தோர் பார்க்கும் காட்சிகளை பார்ப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
பெற்றோர் அனுமதியோடு
சிறுவன் பயன்படுத்திய எக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் அதிகாரிகள் கூறும்போது, இதுபோன்ற காட்சிகளை பெற்றோர் அனுமதியுடன் பார்க்கும் வகையில் தடுப்பு முறைகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
மைக்ரோசாப்ட் கட்டுப்பாடு
இந்த வீடியோ கேம்ஸ் தயாரிப்பை வெளியிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எங்களது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள தயாரிப்புகள், பெற்றோர் தங்களது குழந்தைகள் விளையாட ஏற்றது எது என்றும் இணையதளத்தில் எதனை பார்க்கலாம் என்றும் அனுமதி அளிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க ஏற்ற முறையில் உள்ளவை ஆகும்.
பெற்றோர்கள் கட்டுப்பாடு
எனவே, குழந்தைகளை தவறான வழியில் செல்லாத வகையில் பெற்றோர் எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக, எக்ஸ் பாக்ஸ் கணக்கில் சிறுவர்கள் பார்க்கும்போது, அது இன்டர்நெட் பயன்பாட்டை தானாக ஆப் செய்து விடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகள் செட்டிங்சில் ஏதேனும் மாற்றி உள்ளனரா என்று கவனமுடன் பார்க்க வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
பள்ளியில் போர்னேகிராபி
கடந்த வருடம் நவம்பரில், 12 வயது சிறுவன் ஒருவன், 10 வயதிற்கு குறைந்த தனது சகோதரியை 3 முறை பலாத்காரம் ஒப்பு கொண்டுள்ளான். அவன் படித்த பள்ளியிலேயே போர்னோகிராபி பாலியல் தொடர்பான இணையதளத்தை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளான். பின்னர் அதனை செயல்படுத்தி பார்க்க நினைத்த அவன் இத்தகைய குற்ற செயலில் ஈடுபட்டு உள்ளான்.
சிறுவனுக்கு தண்டனை
ஒரு வருடமாக தவறான நடத்தையில் ஈடுபட்ட நிலையில், சிறுமி தனது குடும்ப உறுப்பினரிடம் இவ்விசயத்தை தெரிவிக்கவே அதனை அடுத்து தான் சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், 3 வருடங்கள் அந்த சிறுவனுக்கு சீர்திருத்த தண்டனை வழங்கப்பட்டது. அவன் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வீட்டில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications