டிரம்ப் டூ நெதன்யாகு! அடுத்தடுத்து வீழும் வலதுசாரிகள்! பிரேசிலில் அதிபர் "அவுட்".. வெல்லும் இடதுசாரி
பிரேசில்லா: பிரேசிலில் அதிபருக்கான முதல் கட்ட தேர்தலில் அதிபரும், தீவிர வலதுசாரியுமான போல்சார்னோ பின்னடைவை சந்தித்து உள்ளார்.
உலக அளவில் வேகமாக வளர்ந்து வந்த வலதுசாரி தத்துவம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தோல்வியை தொடர்ந்து உலக அளவில் வலதுசாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியை சந்தித்து வருகின்றன.
பொதுவாக வல்லரசு நாடுகளில் ஒரு அரசியல் தத்துவம் வீழ்கிறது என்றால் அது சர்வதேச அளவில் தொடரும் என்பார்கள். சோவியத் யூனியன் வீழ்ந்த பின் பல கம்யூனிச நாடுகள் அடுத்தடுத்து ஆட்சி மாற்றங்களை சந்தித்தது. தீவிர வலது சரியான டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த பின் உலகம் முழுக்க வலதுசாரி தத்துவம் வேகமாக வளர்ந்தது.
பல நாடுகளில் வலதுசாரி தலைவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் அதே டிரம்பின் தோல்விக்கு பின் வலதுசாரிகள் தோல்வியை நோக்கி சென்றனர். தேசியவாதம் பேசும் தலைவர்களும் தோல்விகளை சந்தித்தனர்.

தோல்வி
உதாரணமாக அமெரிக்க அதிபரின் தோல்விக்கு பின் பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலில் தீவிர வலதுசாரியான் பெஞ்சமின் நெதன்யாகு தோல்வி அடைந்தார். அங்கு "மய்யம்" கொள்கை கொண்ட யார் லிபிட் பிரதமர் ஆனார் . அதேபோல் தீவிர வலதுசாரியான போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் வீழ்ந்தார். அவருக்கு பதிலாக மென் வலதுசாரியாக் ட்ரூஸ் பிரதமர் ஆகி உள்ளார். இலங்கையில் கூட தீவிர தேசியவாதம் பேசிய ராஜபக்சேக்கள் இருவரும் பதவியை இழந்து உள்ளனர். இன்னும் பல நாடுகளில் வலதுசாரிகள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.

எதிர்ப்பு
இந்த நிலையில்தான் தற்போது பிரேசிலில் தீவிர வலதுசாரியான ஜெய் போல்சார்னோ தோல்வியை நோக்கி சென்றுள்ளார். அதிபரான இவர், வலதுசாரி கட்சியை சேர்ந்தவர். இவரை எதிர்த்து முன்னாள் பிரதமரும், தொழிலாளர் கட்சியை சேர்ந்து இடதுசாரியுமான லூலா சில்வா போட்டியிட்டார். சில்வா முன்னாள் அதிபர். சில்வா எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றில் முறைகேடு செய்த்தாக ஜெயிலுக்கு சென்று , ஆட்சியை இழந்தார். 18 மாதங்கள் சிறையில் இருந்த இவர், குற்றம் செய்யவில்லை என்று உறுதியானதால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

2003
2003-2010 வரை இவர்தான் பிரேசில் அதிபராக இருந்தார். இந்த நிலையில் இவரின் வீழ்ச்சியால் அங்கு வலதுசாரி தத்துவம் திடீரென எழுச்சி பெற்றது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் இடதுசாரிகள் அங்கு வெற்றியை நோக்கி சென்றுள்ளனர். பிரேசில் அதிபர் தேர்தலில் முதல் சுற்றில் சில்வா முன்னிலை பெற்றுள்ளார். அங்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும். முதல் கட்டத்தில் 50 சதவிகித வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அப்படி பெற்றால் அவர்தான் அதிபர்.

இரண்டாம் கட்டம்
அப்படி இல்லை என்றால் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும். முதல் கட்டத்தில் டாப் இரண்டு இடங்களுக்கு வந்தவர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடுவர். இதில் 51+ சதவிகித வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றார் அவர் அதிபர் ஆவார். எப்போதும் முதல் தேர்தல் அக்டோபர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும். அந்த வகையில் நடந்து முடிந்த தேர்தலில் சில்வா வெற்றிபெறவில்லை என்றாலும் 48.4 சதவிகிதம் வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். போல்சார்னோ வெறும் 43.2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

இரண்டாம் கட்டம்
இதன் மூலம் மக்கள் மீண்டும் சில்வா அதிபராக வேண்டும். இடதுசாரிகள் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பது உறுதியாகி உள்ளது. இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடக்கும். இதில் மீண்டும் வாக்கெடுப்பு நடக்கும். அதில் சில்வா 51+ சதவிகித வாக்குகளை வென்று அதிபர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் வலதுசாரி தலைவர் வீழ்ச்சி அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications